TNPSC Current Affairs Jan 2021 to March 2022

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 2021 – மார்ச் 2022

ஜனவரி 2021

Table of Contents

  • தமிழக அரசின் 47-வது தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
  • பொதுமுடக்கு காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக, தெற்கு ரயில்வேக்கு ‘ஸ்காச்’ நிறுவளம், வெள்ளி விருது வழங்கி கௌரவித்துள்ளது.
  • ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் கோயம்புத்தூரில் உள்ள வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு (Velliangiri Uzhavan Producer Company Limited Coimbatore) தமிழக அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது.
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி, நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 2021ஆம் ஆண்டின் குடியரசு தினவிழாவையொட்டி ஜனாதிபதி விருதுக்கான பெயர் பட்டியலில் தமிழக போலீஸ் துறையை சேர்ந்த 20 பேர் இடம் பெற்றுள்ளனர்.
  • சிவகங்கை அருகே வி.புதுகுளம் கண்மாயில் கி.பி. 12-13ம் ஆண்டுக்கு இடைப்பட்ட பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • உத்திரமேரூரில் 8-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.


  • 2021ஆம் ஆண்டின் குடியரசு தினத்தை ஒட்டி, சிறந்த சேவைக்கான ஜனாதிபதி விருதுக்கு, கர்நாடகாவின் 19 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவின் நீளமான எஃகு வளைவு பாலம் (வஹ்ரூ பாலம்) மேகாலயாவின் முதலமைச்சர் கான்ராட் கே சங்மா திறந்து வைத்தார்.
  • அசாம் மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு போடோ தீவிரவாதிகளால் எரிக்கப்பட்ட பழமையான காதி நிறுவனத்தை, கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் மீண்டும் புதுப்பித்து செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது.
  • பிராண்ட் ஃபைனான்ஸ் “ஐடி சர்வீசஸ் 2021” அறிக்கையின்படி, டி.சி.எஸ் இப்போது உலகின் மூன்றாவது மிக மதிப்பு வாய்ந்த ஐ.டி சேவை பிராண்டாகும். அக்சென்ச்சர் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
  • டாடா அறக்கட்டளை சார்பில் ‘இந்தியா நீதி அறிக்கை -2020’ என்ற தலைப்பில், பொதுமக்களுக்கு நீதி வழங்குவதில் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பட்டியலில், மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • 2021ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற 32 காட்சிகளின் வரிசையில், உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சிறந்த காட்சிக்கான விருது அறிவிக்கப் பட்டது. உத்தரப்பிரதேசத்தின் காட்சி அயோத்தி என்பதே ஆகும்.
  • நீதித்துறையின் சிறந்த மனிதராக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபத்சதாசிவத்திற்கு “வெளிநாடு வாழ் இந்தியர்கள் விருது” வழங்கப்பட்டது.
  • குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நமது ராணுவ பலத்தை விளக்கும் வகையில் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் முதல்முறையாக விமானப்படையைச் சேர்ந்த பாவனா காந்த், சுவாதி ரத்தோர் ஆகிய 2 பெண் பைலட்கள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.
  • புதுச்சேரி பிரெஞ்சுப் பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயகர் என்பவருக்கு பிரெஞ்சு அரசின் சிறந்த மொழிப்பெயர்ப்பு நூலுக்கான ‘ரோமன் ரோலன் பரிசு’ அளிக்கப்பட்டுள்ளது.
  • கேரள மாநில அரசு ‘ஒரு பள்ளி ஒரு ஐ.ஏ.எஸ் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அறிவார்ந்த மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்க அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இன்டெல் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பாட் கெல்சிங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் 26-வது தலைமை நீதிபதியாக முகமது ரஃபீக் பதவியேற்றார்.
  • பீகாரைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி அஞ்சலி குமாரி, அங்குள்ள காவல் நிலையத்தில் ஒருநாள் காவல்துறை ஆய்வாளராகப் பணியாற்றி சாதனை படைத்துள்ளார்.
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு நாள் முதல்வராக ஷிருஷ்டி கோஸ்வாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சுனீத் சர்மா பதவியேற்றார்.
  • இந்தியாவில் புதிதாக இரண்டு அரியவகை எறும்பு இனங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. தமிழகம், கேரளாவில் ‘ஊசரே’ (Ooceraea) என்ற புதிய எறும்பினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் 67-வது செஸ் கிராண்ட் மாஸ்டராகியுள்ளார் கோவாவைச் சேர்ந்த 14 வயது வியோன் மெண்டோன்கா.
  • இந்திய அரசால் தொடங்கப்பட்ட ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ். இஸபெல்லாவுக்கு சிறந்த பெண் தலைவருக்கான விருது வழங்கப் பட்டுள்ளது.
  • இந்தியாவில், 50 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து எழுதி வரும் ஒரே எழுத்தாளர் என அங்கீகரித்து, கிரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமாருக்கு ‘இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சாதனை விருது வழங்கி கௌரவித்துள்ளது.
  • இந்திய ரயில்வேயின் தென்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம் சார்பில் சரக்கு ரயில் போக்குவரத்தில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 5 சரக்கு ரயில்களை இணைத்து 3.5 கி.மீ நீளம் கொண்ட சரக்கு ரயில் உருவாக்கப்பட்டது.
  • இந்திய ரிசர்வ் வங்கி பொது மேலாளர் கிரிதரன் “Right Under our Nose” என்றபுத்தகத்தை எழுதியுள்ளார். இது அவரது முதல் புத்தகம் ஆகும்.
  • கொல்கத்தாவில் முதன்முறையாகப் படகில் குழந்தைகளுக்கான நூலகம் ஒன்றை தொடங்கியுள்ளது.
  • தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்றது.


  • உலகளாவிய காலநிலை அபாய அட்டவணை  2021 குறியீட்டின் படி, இந்தியா மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதி கழகத்தின் இணை தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேவ் ஜெகதீசன் என்பவரை ஜனாதிபதி ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார்.
  • மின்சாரத்தால் இயங்கும் 1.5 கி.மீ நீளமுடைய உலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக ரயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • ‘பிராண்டு பைனான்ஸ்’ நிறுவனம் உலகளவிலான, 500 வலுவான பிராண்டுகளின் பட்டியலை தொகுத்து வழங்கி உள்ளது. இந்த பட்டியலில், முதலிடத்தில் சீனாவை சேர்ந்த மொபைல் செயலியான, ‘விசாட்’ உள்ளது.
  • அபுதாபியில் ஷேக் ஜாயித் பாரம்பரிய திருவிழாவில் 35 நிமிடங்கள் இடைவிடாமல் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு 2 கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.
  • அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளி உலக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா இன்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
  • டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் பிளெட்சர் பள்ளி உருவாக்கிய டிஜிட்டல் பரிணாம ஸ்கோர்கார்டின் படி, “பிரேக் அவுட் பொருளாதாரங்களில்” இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் சீனா முதலிடம் பிடித்துள்ளது.
  • ரஷ்யாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை Yekaterina Nekrasova பனிக்கட்டியால் உறைந்த ஏரி ஒன்றில் 280அடி ஆழத்தில் நீந்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
  • அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • வடகிழக்கு ஐரோப்பிய நாடான எஸ்டோனியா நாட்டின் முதல் பெண் பிரதமராக கஜா கலாஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • தென் பிராந்திய ராணுவ தலைமை தளபதியாக தமிழகத்தை சேர்ந்த லெப்டினென் ஜெனரல் அருண் பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒற்றை ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்களை ஏவி சாதனை படைத்துள்ளது.

  • பாங்காக்கில் நடைபெற்ற உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயினின் கரோலினா மரினை தோற்கடித்து, தைவாள் வீராங்கனை டாய் ட்ஸூ யிங் சாம்பியன் பட்டம் வென்றார்.
  • இந்தியாவில் நடைபெறும் முன்னணி முதல்தர கிரிக்கெட் போட்டியான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த 87 ஆண்டுகளில் ரஞ்சி கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
  • சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 6000 ரன்கள் கடந்த 6வது இந்திய வீரர் என்ற சாதனையை புஜாரா எட்டி உள்ளார்.
  • தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கரோலினா, ஆக்சல்சென் மீண்டும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரவரிசையின் வரலாற்றிலேயே டெஸ்ட் பிரிவில் முதல்முறையாக நியூஸிலாந்து அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

  • தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 2021, ஜனவரி 11 முதல் 2021 ஜனவரி 17 வரை கொண்டாடப்படுகிறது.
  • பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாக தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24 அன்று கொண்டாடப்படுகிறது.
  • இந்தியாவில் இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய வாக்காளர் தினம் (National Voters’ Day) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக தொழுநோய் ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டில் ஜனவரி 31 அன்று இந்த தினம் கொண்டாப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *