நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 2021 – மார்ச் 2022 |
பிப்ரவரி 2021
- மருத்துவ விஞ்ஞானத்தில் 50 பிரிவுகளைக் ளைக் கண்டறிந்து பதில் கூறிய 4-ம் வகுப்பு மாணவி ருவந்திகா மாரிக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது
- கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு அதிகபட்ச வயது 40ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய, 100 சாட்டிலைட்க மூலம் வானில் பறக்க விட்டு சாதனை படைத்தனர்.
- தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது, திருவாரூர் மாவட்டம் வலம் ஒன்றியம் வேடம்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது
- சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக (பொறுப்பு) நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
- தமிழகத்துக்கான நெதர்லாந்து நாட்டின் கவுரவ துணைத் தூதராக கோபால்சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- சட்டத்துறை செயலாளராக சி.கோபி ரவிகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக டி.ஜி.பி. சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- குழந்தைகள் வாழத் தகுதியான நாடுகள் பட்டியலில் சர்வதேச அளவில் இந்தியா 131-வது இடத்தைப் பெற்றுள்ளது.
- ஜம்மு-காஷ்மீரின் தொகுதி மறு வரையறை ஆணையத்தின் உறுப்பினராக தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திராவை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நியமித்துள்ளார்.
- 2019ஆம் ஆண்டில் உலகளவில் இராணுவத்திற்க்கான அதிகம் செலவிடப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தைப் (60.5 பில்லியன் அமெரிக்க டாலர்) பெற்றுள்ளது.
- இந்தியாவின் 2வது மிகப் பெரிய பணக்காரர் என்ற இடத்தை ராதாகிஷன் தமானி பிடித்துள்ளார். ‘அவென்யூ சூப்பர் மார்க்கெட்’ நிறுவனத்தின் நிறுவனரும், ‘டிமார்ட்’ உரிமையாளருமான ராதாகிஷன் தமானியின் சொத்து மதிப்பு 1.27 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக ‘போர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்ஸ் இண்டக்ஸ்’ தெரிவித்துள்ளது. இதையடுத்து, முகேஷ் அம்பானிக்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார் ராதாகிஷன் தமானி.
- அரவிந்த் கெஜ்ரிவால் 3ஆவது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
- மேகாலயாவில் உலகின் மிகப் பெரிய நிலத்தடி மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
- ஏர் இந்தியா நிறுவன பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரம் காட்ட வரும் நிலையில், அதன் புதிய தலைவராக ராஜீவ் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.
- வெளிநாடுகளுக்கு செயற்கைக் கோள்கள் தயாரிக்கும் இந்தியாவின் முதல் தனிய நிறுவனம் எனும் பெயரை ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆனந்த் டெக்னாலறின் நிறுவனம் பெற்றுள்ளது.
- பாபா அணு ஆராய்ச்சி மையம், “பாபா கவாச்” என்ற புதிய புல்லட் ப்க. ஜாக்கெட்டை உருவாக்கியது. ஜாக்கெட்டுகளை மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) பயன்படுத்த உள்ளது.
- உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் என 27 ஆயிரம் பேருக்கு, 19 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி வழங்கிய நிகழ்வு உலக சாதனையாகியுள்ளது.
- அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவாலுக்கு அரசியலுக்கான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி விருது 2020 வழங்கப்பட்டது.
- புத்தாக்க கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய 23 மாணவர்கள் குழுவுக்கு ‘சாத்ரா விஸ்வகர்மா’ விருதை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டெல்லியில் வழங்கினார்.
- ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடந்த 19 வயதினருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சண்டிகர் வீராங்கனை காஷ்வி கவுதம் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
- ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் பன்சால், புதுதில்லியில் உள்ள அந்நிறுவன தலைமை யகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
- நாட்டிலேயே ஹெச்ஐவி/ எய்ட்ஸ் பாதிப்பில் மிசோரம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
- பிரசித்திப்பெற்ற மலையாளக் கவிஞரும், கிருஷ்ண பக்தருமான பூந்தானத்தின் பெயரில் குருவாயூர் தேவஸ்தானம் ஆண்டுதோறும் பக்திப் படைப்புகளுக்கு விருது வழங்கி வருகிறது.
- லெப்டினன்ட் ஜெனரல் சாண்டி பிரசாத் மொஹந்தி, ராணுவ பணியாளர்களின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சி.பி.ஐ., அமைப்பின் இயக்குனராக, ஐ.பி.எஸ்., அதிகாரி பிரவீன் சின்ஹா பொறுப்பேற்றார்.
- ஐஐடி கான்பூர் கல்வி நிர்வாகத்தில் உள்ளவர்கள் மிகவும் குறைவான எடை (4kg)கொண்ட ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ளனர்.
- கூகுள் கிளவுட் இந்தியாவுக்கான புதிய நிர்வாக இயக்குநராக பிக்ரம் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.
- அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் கடந்த 7 மாத பயணத்திற்கு பிறகு செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்து சாதனை படைத்துள்ளது.
- இந்தியா மற்றும் நேபால் ஆகிய இரு நாடுகளையும் இணைக்கும் 108 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்தோ – நேபால் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
- மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் அடுத்த பழங்கால பிம்பேத்கா கற்பாறைகள் பகுதியில் டிக்கின்சோ என்ற பழங்கால விலங்கின் எச்சத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களின் தகவலின் படி விலங்கின் படிமம் 17 அங்குல நீளம் கொண்டதாகவும், சுமார் 570 மில்லியன்ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. !
- மடகாஸ்கரில் உலகின் மிகச் சிறிய பச்சோந்தி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 1.4 செ.மீ நீளமுள்ள இதுதான் ஊர்வன இனத்திலேயே மிகச் சிறியது என்றும் கருதப்படுகிறது.
- டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதி முரளிதர் பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
- உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் தற்காப்பு பயிற்சியில் மாணவர்கள் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
- மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் திருநங்கைகளின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக முதல் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.
- கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே காவிரிப் படுகையில் பேட்டரிகளுக்குப் பயன்படும் லித்தியம் உலோகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்காளியாக அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
- சைபிரியா பிரதேசத்தில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பறவையின் உடல், 46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹார்ன்ட் லார்க் (homed lark) பறவையினுடையது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- உலகின் மிக வயதான மனிதர் என, ஜப்பானைச் சேர்ந்த சிடெட்ஸு வடனாபேவை கின்னஸ் சாதனைப் புத்தகம் அறிவித்துள்ளது.
- பிரான்ஸ் நாட்டுக்கான புதிய இந்திய தூதராக ஜாவித் அஷ்ரஃப் நியமிக்கப்பட்டார்.
- உலகளவில் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.
- ஆள்நடமாட்டம் இல்லாத லண்டன் சுரங்க நடைபாதையில் இரண்டு எம். சண்டையிட்டுக் கொள்ளும் புகைப்படம் 2019 – ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றுள்ளது.
- ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழக்கூடிய உலகின் முதலாவது உயிரினத்.. இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை ஜெல்லிஃபிஷ் மீனுடன் தொடர்புடைய ஒரு சிறிய ஒட்டுண் வகையை சார்ந்ததாகும்.
- ரோசெஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் விஞ்ஞானிகள் 2 மாஸ் 1155 7919 பீ” என்று பெயரிடப்பட்ட (குழந்தை இராட்சத கிரகம்) கிரகத்தை கண் பிடித்தனர்.
- உறைந்த நீருக்கு அடியில் ஒரே மூச்சில் 180 மீட்டர் ஆழம் வரை நீச்சலடித்த சென்று ரஷ்ய வீரர் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
- எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தை அடைந்துள்ளது.
- தானமாக பெற்ற இருதயத்தை 24 மணி நேரம் வரை ‘துடிப்பாக’ வைத்திருக்கம் கருவியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
- கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து மறுசுழற்சி செய்யும் புதிய படகினை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த யுவான் போர்கனான் கண்டுபிடித்துள்ளார். ‘
- அமெரிக்காவை சேர்ந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் சிஇ – ஜெப் பெசோஸ், அந்த பதவியிலிருந்து விலகுகிறார். இவருக்கு பதிலாக அமேசான் வெப் சர்வீசஸ் சிஇஓ ஆன்டி ஜெஸி பொறுப்பேற்க உள்ளார். பெசோல் எக்சிகியூட்டிவ் சேர்மேன் பதவியை ஏற்கவிருக்கிறார்.
- அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், யோகா பல்கலைக்கழகம் அமைக்கப் பட்டுள்ளது.
- சென்னையில் நடந்த சீனியர்களுக்கான தேசிய அளவிலான 77-வது ஸ்குவாஷ் I சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா 15 – வது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
- டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியை கேப்டன் விராட் கோலி முந்தி சாதனை : படைத்துள்ளார்.
- முன்னாள் இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ராபின் சிங் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
- டாக்டர் நிதி குமார் (SERB) மகளிர் சிறப்பு விருது -2020 ஐ வென்றுள்ளார். அவர் லக்னோவின் சி.எஸ்.ஐ.ஆர்-சி.டி. ஆர்.ஐ மூலக்கூறு ஒட்டுண்ணி மற்றும் நோயெதிர்ப்பு பிரிவின் மூத்த விஞ்ஞானி ஆவார்.
- சர்வதேச கிரிக்கெட் அமைப்பான Icc தனது புதிய துணைத்தலைவராக இம்ரான் குவாஜா என்பவரை நியமித்துள்ளது.
- இந்தியாவின் 13 வயதான கிராண்ட்மாஸ்டர் டி குக்கேஷ் பிரான்சில் நடந்த 34-வது (Cannes Open) சதுரங்க போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதி சுற்றில் குக்கேஷ் 7.5 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளார்.
- ரோஸ் டெய்லர் கிரிக்கெட் உலகில் விளையாட்டின் மூன்று பிரிவுகளிலும் 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
- அமெரிக்காவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில், வீரர் ஒருவரை, 16 வயது மாணவி வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
- சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) 2019 ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை முதன்முறையாக வென்ற இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார் கேப்டன் மன்ப்ரீ த் சிங்.
- சர்வதேச கிரிக்கெட் அமைப்பான Icc தனது புதிய துணைத்தலைவராக இம்ரான் குவாஜா என்பவரை நியமித்துள்ளது.
- அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் புதிய தலைவராக போட்டியின்றி அஜய் படேல் தேர்வு செய்யப்பட்டார்.
- டெல்லியில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ரவி தாஹியா வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
- டெல்லியில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
- சென்னையை சேர்ந்த இளம் கார் பந்தய வீரரும் வழக்கறிகருமான சந்தீப் குமார். 2020 எல்றிப் ஃபார்முலா 4 நேஷனல் ரேசிங் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
- 20 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் உத்தரப்பிரதேச வீராங்கனை முனிடா பிரஜாபதி புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.
- 20 வயதுக்கு உட்பட்டோருக்குகான ஆடவர் தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில், 24 ஆண்டு கால தேசிய சாதனையை சுளில் தவார். என்ற தடகள வீரர் முறியடித்து தங்க பதக்கம் வென்று உள்ளார்.
- சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (AIBA) அணி உலகக்கோப்பை 2020-இன் புதிய வடிவமைப்பை வழங்கும் முதல் நாடு ரஷ்யாவாகும்.
- ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2 ஆம் தேதி உலகளவில் “உலக சதுப்புநிலங்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது.
- ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 11 அன்று உலக யுனானி தினம் அனுசரிக்கப்படுகிறது.
- சமூக நீதியினை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக “உலக சமூகநீதி தினம்” ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் “A Call for Social Justice in the Digital Economy”.