28.4 C
New York
Friday, July 26, 2024

Buy now

spot_img

TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – சிலபஸ், தேர்வு முறை விவரம் இதோ!

TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – சிலபஸ், தேர்வு முறை விவரம் இதோ!

தமிழகத்தில் ஏராளமானோர், அரசுப் பணி போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். எனவே தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள், தேர்வுகளுக்கான முழு பாடத்திட்டத்தை தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்கு உதவும் வகையில் குரூப் 4 மற்றும் VAO தேர்வுக்கான, பாடத்திட்டம் குறித்த முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

முழு விவரம்:


தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு TNPSC பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்ற போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இருப்பினும் கடந்த 2 வருடங்களில் கொரோனா தாக்கம் காரணமாக போட்டித் தேர்வுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் வருட கணக்கில் போட்டித் தேர்வு அறிவிப்புக்காக தேர்வர்கள் காத்திருந்தனர். தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா தாக்கம் ஓய்ந்து வருகிறது. இந்த நிலையில் வகையில் குரூப் 2, குரூப் 2A தேர்வு, தொடர்ந்து குரூப் 4 VAO தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியானது.

இந்த அறிவிப்பு அடிப்படையில் குரூப் 4 தேர்வு மூலம் 7,382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் குரூப் 4 தேர்வுக்கு மார்ச் 30 முதல் ஏப்.28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டதன், அடிப்படையில் இந்த தேர்வுக்கு விண்ணப்ப பதிவு செய்வதற்கான கால அவகாசம் முடிந்து விட்டது. குரூப் 4 தேர்வு மூலம் ஜூனியர் உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சு செய்பவர் (டைப்பிஸ்ட்) ஸ்டெனோ, டைப்பிஸ்ட், கள ஆய்வாளர் மற்றும் வரைவாளர் ஆகிய பதவிகள் நிரப்பப் பட உள்ளது. இந்த தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும்.

ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். முதல் பகுதியில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு நடைபெறும். இதில், தமிழ் மொழிப்பாடப்பிரிவில் இருந்து 100 வினாக்கள் இடம்பெறும். இதில் தற்போது 40 மதிப்பெண்கள் பெறுவது தகுதியாக மாற்றப்பட்டுள்ளது. தமிழ் மொழிப்பாடப்பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

பொது அறிவுப் பகுதியை பொறுத்தவரை 100 வினாக்களில் 75-பொது அறிவு வினாக்களும் , 25-திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். பொது அறிவு பகுதியில் தலைப்புகளில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் என்பது குறிப்பித்தக்கது. குரூப் 4 எழுத்து தேர்வு வரும் ஜூலை 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles