13.1 C
New York
Monday, September 9, 2024

Buy now

spot_img

TNPSC பொதுத்தமிழ் புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள் Part 2

TNPSC பொதுத்தமிழ் புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள் Part 2

Table of Contents

டி.கே.சிதம்பரநாதர் பற்றியக் குறிப்புகள்:

  • “டி.கே.சி” என்றழைக்கப்படும் இரசிகமணி டி.கே.சிதம்பரநாதர் பிறந்த ஆண்டு 1882.
  • “தமிழில் எல்லாம் உண்டு; தமிழின் கவிச்சுவைக்கு ாடுமில்லை இணையுமில்லை; தமிழால் அறிவியல் மட்டுமன்று; அனைத்து இயல்களையும் கற்க முடியும்” என்று கூறியவர் – இரசிகமணி டி.கே.சிதம்பரநாதர்.
  • இவரது வீட்டில் ஞாயிறுதோறும் இலக்கியக் கூட்டம் நடைபெறும். அதற்கு “வட்டத்தொட்டி” என்று பெயர்.
  • இவர் வழக்கறிஞராக பணிபுரிந்தார். அதை விட தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே.சி விரும்பினார். 
  • இவரது கடிதங்கள் இலக்கியத்தரம் கொண்டு புதிய இலக்கிய வகையாகவே கருதப்பட்டன.
  • “இதயொலி”, “கம்பர் யார்?” முதலான நூல்களை எழுதியுள்ளார். 
  • “முத்தொள்ளாயிரம்” “கம்பராமாயணம் ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார்
  • சென்னை மாநில மேலவையின் உறுப்பினராகத் திகழ்ந்துள்ளார்.
  • அறநிலையத் துறையின் ஆணையராகப் பணியாற்றியுள்ளார்.

டி.கே.சி-யின் பட்டப்பெயர்கள்:

  1. கடித இலக்கியத்தின் முன்னோடி
  2. தமிழிசைக் காவலர்
  3. வளர்தமிழ் ஆர்வலர்
  4. குற்றால முனிவர்

மாயூரம் வேதநாயகம் பற்றியக் குறிப்புகள்:

  • பிறந்த ஆண்டு – 1826
  • தமிழின் முதல் நாவலான “பிரதாப முதலியார் சரித்திரத்தை ” இயற்றிய  மாயூரம்வேதநாயகம்.
  • 1805 முதல் 1861 வரை ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்து “சித்தாந்தசங்கிரகம்” என்ற நூல்கள் வெளியிட்டவர் – மாயூரம் வேதநாயகம்.

மாயூரம் வேதநாயகம் இயற்றிய நூல்கள்:

  • பெண்மதி மாலை
  • திருவருள் அந்தாதி
  • சர்வ சமய சமரசக் கீர்த்தனை
  • சுகுண சுந்தரி

வ.சுப.மாணிக்கம் பற்றிய குறிப்புகள் :

  • “தமிழ் இமயம்” என்று அறிஞர்களால் போற்றப்படுபவர்.
  • “தமிழ் வழிக்கல்வி இயக்கம்” என்ற அமைப்பை நிறுவியவர்.
  • அவருக்குத் தமிழக அரசு அவருடைய மறைவிற்குப் பிறகு, திருவள்ளு விருது வழங்கியதுடன் 2006ஆம் ஆண்டு அவருடைய நூல்கள் நாட்டுடமையாக்கிச் சிறப்பித்தது.

இவர் இயற்றிய நூல்கள் :

  • தமிழ்க்காதல்
  • வள்ளுவம்
  • கம்பர்
  • சங்கநெறி

நா.பிச்சமூர்த்தி இயற்றிய நூல்கள்:

  • கிளிக்குஞ்சு
  • பூக்காரி
  • வழித்துணை
  • கிளிக்கூண்டு
  • காட்டுவாத்து

சி.சு.செல்லப்பா இயற்றிய நூல்கள்:

  • மாற்று இதயம்
  • நீ இன்று இருந்தால்
  • புதுக்குரல்
  • வாடிவாசல்

வல்லிக்கண்ணன் (கிருஷ்ணசாமி) இயற்றிய நூல்கள்:

  • அமர வேதனை
  • புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும் (சாகித்திய அகாதமி பரிசு)

புவியரசு (கைன்நாதன்) இயற்றிய நூல்கள்:

  • இதுதான் மீறல்
  • இப்போதே
  • இப்படியே

சக்திக்கனல் (பழனிசாமி) இயற்றிய நூல்கள்:

  • புழுதிப் புயல்
  • கனகாம்பரமும் டிசம்பர் பூக்களும்
  • நீங்கள் கேட்டவை

சிற்பி பாலசுப்ரமணியம் இயற்றிய நூல்கள்:

  • நிலவுப் பூ
  • சிரித்த முத்துக்கள்
  • சர்ப்ப யாகம்
  • மௌன மயக்கங்கள்
  • சிற்பி பாலசுப்ரமணியம் இருமுறை சாகித்திய அகாதமி பரிசுப் பெற்றவர். ஒன்று கவிதைக்கு, மற்றொன்று மொழிபெயர்ப்புக்கு,

ஈரோடு தமிழன்பன் (ஜெகதீசன்) இயற்றிய நூல்கள் :

  • தோணி வருகிறது
  • தீவுகள் கரையேறுகின்றன
  • சூரிய பிறைகள் (ஹைகூ)
  • நிலா வரும் நேரம்
  • ஊமை வெயில்
  • திரும்பிவந்த தேர்வலம்

இன்குலாப் இயற்றிய நூல்கள் :

  • இன்குலாப் கவிதைகள்
  • வெள்ளை இருட்டு
  • சூரியனைச் சுமப்பவர்கள்
  • கிழக்கும் பின் தொடரும்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles