28.5 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

TNPSC பொதுத்தமிழ் புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள்

புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள்

  1. பாரதியார் பிறந்து வளர்ந்த இடம் எட்டையபுரம்.
  2. தேசிக விநாயகளார் கன்னியாகுமரிப் பக்கம் – அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலும் அவர் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் – திருநெல்வேலி.
  3. கடிகை முத்துப்புலவர் எட்டையபுரத்தைச் சேர்ந்தவர். இவர் வெங்கடேசுலா எட்டப்ப ராஜாவைப் பற்றிப் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.
  4. மணியாச்சியிலிருந்து ஏழெட்டு மைல் தூரத்தில் தாமிரபரணி நதியும், சிற்றாறும் கலக்கிற இடம் தான் சீவலப்பேரி என்கிற முக்கூடல், முக்கூடல்பள்ளு என்னும் பிரபந்தம் முக்கூடலைப் பற்றியது தான். 
  5. “ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி – மலையாள மிள்ளல் ஈழ மின்னல் சூழ மின்னுதே!” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் – முக்கூடற்பள்ளு
  6. நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி தாயைத் தரிசித்து உரிமை பாராட்டி சுவாமியிடம் சிபாரிசு செய்ய வேண்டும் என்றவர் – பலப்பட்டடைச் சொக்க நாதப்புலவர்.
  7. சீவைகுண்டத்துப் பெருமாளைப் பாடியவர் – பிள்ளைபெருமாள். 
  8. நம்மாழ்வார் பிறந்த இடம் – திருக்குருகூர், இவ்வூர் தற்பொழுது ஆழ்வார் திருநகரி என்று அழைக்கப்படுகிறது.
  9. திருப்புகழ் பாடியவர் – அருணகிரிநாதர்.
  10. கழுகுமலையில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானைப் பற்றி காவடிச் சிந்து பாடியவர் – அண்ணாமலையார்.
  11. “வாடா என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக் கூடாதென்றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே” என்று பாடியவர் – அழகிய சொக்கநாதப்புலவர்.
  12. “நுண் துளி தூங்கும் குற்றாலம்” என்று பாடியவர் – திருஞானசம்பந்தர். “உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் கற்பளவும் இனி அமையும். குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரை கழற்கே கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே!” என்று பாடியவர் – “மாணிக்கவாசகர்”, 
  13. குற்றாலக் குறவஞ்சியை இயற்றியவர் – திரிகூடராசப்பக்கவிராயர் “கயிலை எனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே! கனகமகா மேருவென நிற்கும்மலை அம்மே! துயிலும் அவர் விழிப்பாகி அகிலம் எங்கும் தேடும் துங்கர்திரி கூடமலை எங்கள் மலை அம்மே!”  என்ற பாடல் இடம்பெற்ற நூல் குற்றாலக்குறவஞ்சி. திருநெல்வேலிச் சீமை என்று குறிப்பிடப்படுவது இன்றைய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் இணைந்த பகுதியாகும்.
  14. “ஜெயகாந்தனோடு பல்லாண்டு” என்னும் நூலை எழுதியவர் – பி.ச. குப்புசாமி.
  15. “ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்” என்னும் நூலின் ஆசிரியர் – பி.ச. குப்புசாமி.
  16. “நீரின்றி அமையாது உலகு” என்று கூறியவர் – திருவள்ளுவர்.
  17. “நீரின்றி அமையாதுயாக்கை” என்று கூறும் நூல் – புறநானூறு.
  18. “பூமொழி” என்னும் கவிதையினை எழுதியவர் – யூமாவாசுகி,
  19. அழகின் சிரிப்பு – பாவேந்தர் பாரதிதாசன்.
  20. தண்ணீர் தேசம் – வைரமுத்து.
  21. வாய்க்கால் மீன்கள் – வெ. இறையன்பு.
  22. மழைக்காலமும் குயிலோசையும் – மா.கிருஷ்ணன்.
  23. “கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்” என்னும் நூலின் ஆசிரியர் – “மா.அமரேசன்”, 
  24. தமிழர் நாகரிகமும் பண்பாடும் – அ.தட்சிணாமூர்த்தி.
  25. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் – மா. இராசமாணிக்கனார்.
  26. தமிழ் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் – க.ரத்னம்.
  27. தொல்லியல் நோக்கில் சங்க காலம் – கா.ராஜன்.
  28. தமிழர் சால்பு – சு.வித்யானந்தன்.
  29. அக்னிச் சிறகுகள் – அப்துல் கலாம்.
  30. மின்மினி – ஆயிஷா நடராஜன்.
  31. ஏன், எதற்கு, எப்படி – சுஜாதா. 
  32. “கறுப்பு மலர்கள்” என்ற கவிதை நூலை இயற்றியவர் – நா.காமராசன்.
  33. “தண்ணீர் தண்ணீர்” என்ற நாடக நூலை இயற்றியவர் “கோமல் சுவாமிநாதன்
  34. நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஹெமிங்வேவின் குறுநாவல் – “கிழவனும் கடலும்”.
  35. சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசுபெற்ற கவிதை நூல் – “ஒரு கிராமத்து நதி”
  36. எஸ். இராமகிருஷ்ணனின் சிறார் நாவல் – சாக்ரட்டிஸின் சிவப்பு நூலகம்.
  37. கல்வியில் நாடகம் – பிரளயன்.
  38. சிறுவர் நாடோடிக் கதைகள் – கி.ராஜநாராயணன் 
  39. ஆறாம் திணை – மருத்துவர் கு. சிவராமன்
  40. பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் – நீலமணி
  41. காலம் – ஸ்டீபன் ஹாக்கிங்
  42. சிறந்த சிறுகதைகள் பதிமூன்று – தமிழாக்கம் வல்லிக்கண்ணன்
  43. ஆசிரியரின் டைரி – தமிழில் எம்.பி.அகிலா
  44. தேன்மழை – சுரதா
  45. திருக்குறள் நீதி இலக்கியம் – க.த.திருநாவுக்கரசு
  46. நாட்டார் கலைகள் – அ.கா.பெருமாள்
  47. என் கதை – நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
  48. வேருக்கு நீர் – ராஜம் கிருஷ்ணன்
  49. நாற்காலிக்காரர் – ந.முத்துசாமி
  50. அறமும் அரசியலும் – மு.வரதராசனார்
  51. எண்ணங்கள் – எம்.எஸ்.உதயமூர்த்தி
  52. வீரமாமுனிவர் இயற்றிய நூல் – தேம்பாவணி
  53. யாளைசவாரி – பாவண்ணன்
  54. கல்மரம் – திலகவதி
  55. அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் – ந.முருகேசபாண்டியன் 
  56. நாடற்றவள் – அ.முத்துலிங்கம்
  57. நல்ல தமிழ் எழுத வேண்டுமா? – அ.கி.பரந்தாமனார்
  58. உயிர்த்தெழும் காலத்துக்காக – சு.வில்வரத்தினம்
  59. யுகத்தின் பாடல் – சு.வில்வரத்தினம்
  60. நன்னூல் – பவணந்தி முனிவர்
  61. பேச்சு மொழியும் எழுத்து மொழியும் – இந்திரன்
  62. இயற்கை வேளாண்மை – நம்மாழ்வார்
  63. பனைமரமே பனைமரமே – ஆ.சிவசுப்பிரமணியன்
  64. பறவைகள் உலகம் – சலீம் அலி
  65. சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் – ஆர்.பாலகிருஷ்ணன்
  66. காவடிச்சிந்து – அண்ணாமலையார்
  67. எழுத்து இதழ்த் தொகுப்பு – தொகுப்பாசிரியர் – கி.அ. சச்சிதானந்தன்
  68. அறிவியல் தமிழ் – வா.செ. குழந்தைசாமி
  69. கணினியை விஞ்சும் மனிதமூளை – கா. விசயரத்தினம்
  70. மறைக்கப்பட்ட இந்தியா – எஸ்.இராமகிருஷ்ணன்
  71. “பிம்பம்” என்னும் சிறுகதையின் ஆசிரியர் – “பிரபஞ்சன்
  72. சிவானந்த நடனம் – ஆனந்தகுமாரசுவாமி
  73. ஜீவா – வாழ்க்கை வரலாறு – கே. பாலதண்டாயுதம்
  74. சொல்லாக்கம் – இ.மறைமலை
  75. என் வாழ்க்கை என் கையில் – ஞாறி
  76. மனித வாழ்வை மாற்றியமைத்த கண்டுபிடிப்பாளர்கள் – ஆர்.கே.வி. கோபாலகிருஷ்ணன், மொழிபெயர்ப்பு – அய்யாசாமி 
  77. மனைவியின் கடிதம் – இரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகள் – மொழி பெயர்ப்பு – த.நா.குமாரசுவாமி
  78. ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் – கவிஞர் இன்குலாப்
  79. நான் வித்யா – லிவிங்ஸ் மைல் வித்யா
  80. தமிழ் அழகியல் என்னும் நூலின் ஆசிரியர் – தி.சு.நடராசன்
  81. உய்யும் வழி என்னும் நூலின் ஆசிரியர் – பரலி சு.நெல்லையப்பர்
  82. கிடை என்னும் புதினத்தின் ஆசிரியர் – கி.ராஜநாராயணன்
  83. “மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே கூலி வா, வா!” என்று கூறியவர் – “சிற்பி பாலசுப்ரமணியன்”
  84. நெல்லூர் அரிசி என்ற நூலின் ஆசிரியர் – அகிலன்
  85. சுவரொட்டிகள் என்ற கதையின் ஆசிரியர் – ந.முத்துசாமி
  86. மொழி வரலாறு என்ற நூலின் ஆசிரியர் – மு.வரதராசனார்
  87. நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம் – முனைவர் சு.சக்திவேல்,
  88. தரங்கம்பாடி தங்கப் புதையல் – பெ.தூரன்.
  89. இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) –
  90. ச.தமிழ்ச்செல்வன். K கரும்பலகை யுத்தம் – மலாலா.
  91. தமிழர் உணவு – பக்தவச்சல பாரதி.
  92. நட்புக்காலம் – கவிஞர் அறிவுமதி. 
  93. திருக்குறள் கதைகள் – கிருபானந்தவாரியார்.
  94. கையா, உலகே ஒரு உயிர் – ஜேம்ஸ் லவ்லாக் – தமிழில்: சா.சுரேஷ்,
  95. ஆகாயத்து அடுத்த வீடு – மு.மேத்தா.
  96. தமிழ் பழமொழிகள் – கி.வ.ஜெகநாதன்.
  97. பெரியாரின் சிந்தனைகள் – வே.ஆனைமுத்து. 
  98. அஞ்சல் தலைகளின் கதை – எஸ்.பி.சட்டர்ஜி (மொழிபெயர்ப்பு வி.மு.சாம்பசிவன்).
  99. “தங்கைக்கு” எழுதிய கடிதம் – மு.வரதராசன்,
  100. “தம்பிக்கு” எழுதிய கடிதம் – பேரறிஞர் அண்ணா.
  101. கென்யாவில் பசுமை வளாக இயக்கத்தை தோற்றுவித்தவர் – வாங்கரி மாத்தாய், இவருக்கு 2004 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  102. சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன, அவை – திருமணமும் குடும்பமும்.
  103. உரிமைத்தாகம் என்னும் புதினத்தின் ஆசிரியர் – பூமணி
  104. தமிழர் குடும்பமுறை என்னும் நூலின் ஆசிரியர் – பக்தவச்சலபாரதி
  105. எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்திபிறக்குது மூச்சினிலே” என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது – தந்தை வழிச்சமூகமுறை
  106. சக்கரவர்த்தி திருமகன் – இராஜாஜி
  107. வயிறுகள் – பூமணி (சிறுகதைத் தொகுப்பு)
  108. சிறை – அனுராதா ரமணன்
  109. புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி “விண்வேறு; விண்வெளியில் இயங்குகின்ற வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு” இத்தொடர் தரும் முழுமையான பொருள் – விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறுவேறு.
  110. “குழிமாற்று” என்பது தொடர்புடைய துறை – கணிதம்
  111. இராமலிங்க அடிகள் வரலாறு – ஊரன் அடிகள்
  112. ஒரு பார்வையில் சென்னை நகரம் – அசோகமித்திரன்
  113. ஒரு குட்டித்தீவின் வரைபடம் (சிறுகதைத் தொகுப்பு) – தோப்பில் முகமது மீரான்
  114. சென்னைப் பட்டணம் – ராமச்சந்திர வைத்தியநாத்
  115. தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம் – செந்தீநடராசன்
  116. முச்சந்தி இலக்கியம் – ஆ.இரா.வெங்கடாசலபதி
  117. கல்வெட்டு கல் சொல்லும் கோயில் கதைகள் – குடவாயில் பாலசுப்ரமணியன்
  118. நீர்க்குமிழி – கே.பாலச்சந்தர்
  119. முள்ளும் மலரும் – உமாசந்திரன்
  120. “புதையுண்ட வாழ்க்கை “, “மீண்டெழுதலின் இரகசியம்” என்ற கவிதைத் தொகுப்புகளை எழுதியவர் – சுகந்திசுப்ரமணியன்
  121. தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் – மயிலை சீனி.வேங்கடசாமி
  122. மாறுபட்டுச்சிந்திக்கலாமா? – சிபி.கே.சாலமன்
  123. இயேசுகாவியம் – கண்ணதாசன்
  124. கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
  125. பால் வீதி – அப்துல் ரகுமான்
  126. வீரபாண்டிய கட்டபொம்மன் – அரு.ராமநாதன் 
  127. “ராஜா வந்திருக்கிறார்” என்ற நூலை எழுதியவர் – கு.அழகிரிசாமி
  128. சிற்பியின் மகள் – பூவண்ணன்
  129. அப்பா சிறுவளாக இருந்த போது – அலெக்சாந்தர் ரஸ்கின் (தமிழில் நா.முகமது செரீபு)நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் – முளைவர். சேதுமணி மணியன்
  130. பச்சை நிழல் – உதயசங்கர்
  131. குயில் பாட்டு – பாரதியார்
  132. அதோ அந்தப் பறவை போல – ச. முகமது அலி
  133. உலகின் மிகச்சிறிய தவளை – எஸ். ராமகிருஷ்ணன்
  134. திருக்குறள் தெளிவுரை – வ.உ.சிதம்பரனார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles