ரேஷன் கடைகளில் 4 ஆயிரம் காலி பணியிடங்கள்.. நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு!!
ரேஷன் கடைகளில் 4 ஆயிரம் விற்பனையாளர்கள் மற்றும் எடை அளப்பவர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
2020-21ம் ஆண்டுக்குள் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப 100 முதல் 200 பேருக்கு ஆள்சேர்ப்பு முகாம் மூலம் நேர்காணல் நடத்தி பணியாளர்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டது.ஆனால், ரேஷன் கடையில் வேலை வாங்கித் தருவதற்காக சில அரசியல்வாதிகள் ரூ.5 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரையடுத்து நேர்காணல் முடிந்ததைத் தொடர்ந்து இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான முந்தைய அறிவிப்பை திமுக அரசு ரத்து செய்தது. புதிய வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்த நிலையில், ரேஷன் கடைகளில் 4 ஆயிரம் விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு அரசு கூறியிருப்பதாவது, ரேஷன் கடைகளில் 4,000 விற்பனையாளர்கள் மற்றும் எடை அளப்பவர் பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது விற்பனையாளர் பணிக்கு ப்ளஸ்-2 படித்தவரும், எடை அளப்பவர் பணிக்கு 10-ம் வகுப்பு படித்தவராகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது