மாலை டும்டும்! பிரான்ஸ் மணமகள்..சிவகங்கை மணமகன்! களைகட்டிய காரைக்குடி! தமிழ்னா அவ்வளவு பிடிக்குமாம்!
சிவகங்கை : தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டுப் பெண்ணை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட நிலையில், தமிழ் மொழி மற்றும் தமிழர் கலாச்சாரம் மிகவும் பிடித்தமானது என மணப்பெண் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதி புதூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கள் தங்கராசு – இவர் மாணிக்கவள்ளியின் தம்பதியினர்.
தங்கராசு பிரான்ஸ் நாட்டில் அம்பாசிடரில் பணிபுரிந்து வருவதால் தனது மனைவியுடன் பிரான்ஸ் நாட்டிலேயே வசித்து வருகிறார்.
பிரான்ஸ் பெண் இவரது மகன் கலைராஜன் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் பிறந்த நிலையில் எட்டு வயதில் தனது குடும்பத்தாருடன் பிரான்சுக்கு சென்றுள்ளார். தங்கராசு மகன் அங்குள்ள ரென் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில் அதே கல்லூரியில் அறிவியல் பயின்ற மாணவி கயலை காதலித்து வந்தார்
இந்து முறைப்படி திருமணம் இதனையடுத்து இருவரும் தங்கள் காதலிப்பதை பெற்றோரிடம் கூறியுள்ளனர். அவர்களும் காதலை ஏற்றுக் கொண்ட நிலையில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரில் உள்ள கலைராஜனின் சொந்த கிராமத்தில் அவரது வீட்டில் பிரான்ஸ் பெண் கயலின் தாய் சகோதரி,கலைராஜனின் உறவினர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.
அட்சதை தூவி வாழ்த்து இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மணமகன் பிறந்த ஊரில் தான் திருமணம் நடைபெற வேண்டும் என்று முடிவு செய்து சிவகங்கை மாவட்டம் அமராவதிபுதூரில் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மணமக்கள் இருவரையும் மணமகனின் உறவினர்களும், பிரான்சிலிருந்து வந்திருந்த மணமகளின் உறவினர்களும், அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர்
தமிழ் கலாச்சாரம் மணமக்களை உறவினர்கள், கிராம மக்கள் ஒன்று கூடி வாழ்த்திய நிலையில், தமிழ் முறைப்படி திருமணம் குறித்து பிரான்ஸ் பெண் கயல் கூறுகையில் நாங்கள் படிக்கும் பொழுது மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தோம். தற்போது இந்தியாவில் தமிழகத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்வது சந்தோஷமாக உள்ளது, தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் தனக்கு மிகவும் பிடித்தமானது” என்றார்.