25.8 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

PM Cares | ரூ.4000, பள்ளிப் படிப்புக்கு நிதி | கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பிரதமரின் அறிவிப்பு

PM Cares | ரூ.4000, பள்ளிப் படிப்புக்கு நிதி | கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பிரதமரின் அறிவிப்பு

கொரோனா தொற்றுநோயால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான PM CARES for Children திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் அடிப்படையில் கொரோனா தொற்றுநோயால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அடிப்படைத் தேவைகளுக்கு மாதம் ரூ.4,000, பள்ளிப்படிப்புக்கு நிதியுதவி, உயர்கல்விக்கான உதவித்தொகை, ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். 

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்கையில் ” கொரோனா தொற்றுநோய் பரவலின்போது தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களின் நிலைமை எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன். இந்த திட்டம் தொற்றுநோய்களின் போது பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கானது. குழந்தைகளுக்கான PM CARES திட்டம், அத்தகைய குழந்தைகளுக்கு உதவும் ஒரு முயற்சியாக தொழில்முறை படிப்புகளுக்கு, உயர்கல்விக்கு ஒரு குழந்தைக்கு கல்விக் கடன் தேவைப்பட்டால், PM-CARES அதற்கும் உதவும்” என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்தத் திட்டம், தொற்றுநோயால் பெற்றோரை இழந்த 18 முதல் 23 வயதுடைய இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையுடன் உதவும், மேலும் அவர்களுக்கு 23 வயதாகும் போது அவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், ‘அமைச்சகம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த ஸ்காலர்ஷிப் தொகையை அனுப்பும். அக்குழந்தைகளுக்கு, ‘பி.எம் கேர்ஸ் Children” பாஸ்புக் மற்றும் ஹெல்த் கார்டு அளிக்கப்படும்.

ஆயுஷ்மான் பாரத் – ப்ரதான் மந்த்ரி ஜன் ஆரோக்ய யோஜனா என்னும் திட்டத்தின் கீழ் இந்த ஹெல்த் கார்டு அளிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், குழந்தைகள் தங்களின் பாதுகாவலர்களுடனும், மாவட்ட நீதிபதிகளுடனும், காணொளி நிகழ்வு வழியாக இணைந்தனர். பல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கலந்துகொண்டனர்.

நிலையான கால இடைவெளியில், குழந்தைகளின் நன்மையையும், வளர்ச்சியையும் கண்காணிப்பதே இந்த ஸ்காலர்ஷிப்பின் நோக்கத்திலும், பெற்றோரை இழந்த குழந்தைகள் தாங்களாகவே ஒரு சுதந்திர வாழ்வை வாழ்வதற்குமான நிலையை எட்டவும் இந்த ஸ்காலர்ஷிப் துணைபுரியும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, ‘நான் ஒரு பிரதமராகப் பேசவில்லை. உங்கள் குடும்பத்தில் ஒருவராக இதை உங்களிடம் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்’ என்றது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles