25.9 C
New York
Thursday, July 25, 2024

Buy now

spot_img

IND versus AUS second T20 | ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல்

IND versus AUS second T20: ‘ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல்’… வானிலை மையம் அதிர்ச்சி தகவல்: டாஸைதான் முழுசா நம்பணும்?

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதில் மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 208 ரன்களை குவித்தும், டெத் பௌலர்களின் சொதப்பலால் படுதோல்வியை சந்ததது.

இந்திய அணியில் மாற்றம்:

இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாக இருக்கிறது. இதனால், அதில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை. பந்துவீச்சு துறையில்தான் சொதப்பல்கள் தொடர்கிறது. இன்று பும்ரா வந்துவிடுவார் என்பதால், பந்துவீச்சு துறை பலம்பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

ஆம் பும்ரா வந்துவிட்டால் புவனேஷ்வர் குமார் டெத் ஓவர்களில் பந்துவீச வேண்டிய கட்டாயம் இருக்காது. பவர் பிளேவில் மூன்று ஓவர்கள், மிடில் ஓவர்களின்போது ஒரு ஓவரை வீசிவிட்டு சென்றுவிடலாம். பும்ரா பவர் பிளேவில் இரண்டு ஓவர்களை வீசிவிட்டால், இறுதியில் டெத் ஓவர்களின்போது ஹர்ஷல் படேலுடன் இணைந்து இரண்டு ஓவர்களை வீசிவிட முடியும். இதனால், வேகப்பந்து வீச்சு துறையில் பெரும் பிரச்சினை இருக்காது. இருப்பினும், சஹல்தான் அணிக்கு பிரச்சினையாக இருக்க வாய்ப்புள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles