இந்திராதேவியின் உடல் பத்மாலயா ஸ்டுடியோவில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், அவரது இறுதி ஊர்வலம் நாளை மறுநாள் மகா பிரஸ்தானத்தில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
டோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றும் சவுத் இந்தியன் பிரின்ஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார் நடிகர் மகேஷ் பாபு. தெலுங்கில் அதிக அளவு ரசிகர் படை வைத்திருக்கும் நடிகர்களில் முன்னணியில் உள்ளார் நடிகர் மகேஷ் பாபு.
நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலை மோசமடைந்த நிலையில் இன்று காலை ஹைதராபாத்தில் காலமானார்.