20.7 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

4 வருட பணி | அக்னி பாத் திட்டம் மூலம் இந்திய ராணுவத்தில் சேர்வது எப்படி | தகுதி என்ன | முழு விபரம்

4 வருட பணி | அக்னி பாத் திட்டம் மூலம் இந்திய ராணுவத்தில் சேர்வது எப்படி | தகுதி என்ன | முழு விபரம்


டெல்லி: இந்திய ராணுவத்தில் அக்னி பாத் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 வருட ஒப்பந்தத்தில் இந்திய ராணுவத்தில் பணியில் சேர முடியும். உலகம் முழுக்க பல நாடுகளில் ராணுவ பணிகள் ஒப்பந்த முறைப்படி செய்யப்பட்டு வருகிறது. அதாவது இளைஞர்கள் பிற பணிகளில் சேரும் முன், தங்கள் இளமை காலத்தில் குறுகிய காலத்தில் ராணுவத்தில் பணியாற்ற முடியும்.

இதன் மூலம் ராணுவத்தில் பணியாற்றிய வேலை அனுபவம் அவர்களுக்கு கிடைக்கும். அதோடு அந்தந்த நாட்டு அரசுகள் கூடுதல் வீரர்கள் மிக குறைந்த சம்பளத்திற்கு பணிக்கு அமர்த்த முடியும். 

அக்னி பாத் இதே போன்ற திட்டம்தான் தற்போது இந்திய ராணுவத்தில் அக்னி பாத் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் எப்படி செயல்படும்.., எப்படி இதில் சேருவது என்று பார்க்கலாம். இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் 4 ஆண்டுகள் ராணுவத்தில் குறுகிய கால வீரராக (முப்படையில் ஏதாவது ஒன்றில்) சேர முடியும். 4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். 4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். விருப்பம் இல்லை என்றால் 4 வருடத்திற்கு பின் வெளியேறலாம் விருப்பம் உள்ளவர்கள் நிரந்தரமாக சேர விண்ணப்பிக்கலாம் 

தகுதி என்ன?

அதில் தகுதியானவர்கள் மட்டுமே 4 வருடத்திற்கு மேல் நிரந்தரமாக 15 வருடம் பணியாற்ற தேர்வு செய்யப்படுவர் இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் நிரந்தர பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. பெண்கள், ஆண்கள் இரு பாலினரும் சேர முடியும் 17.5 – 21 வயது கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி. 10 அல்லது 12 வது வரை குறைந்தபட்சம் படித்து இருக்க வேண்டும்.

சம்பளம் என்ன?

இந்த திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். வருடம் செல்ல செல்ல சம்பளம் உயர்த்தப்படும். கடைசி வருடம், அதாவது 4வது வருடம் 40 ஆயிரம் ரூபாய் மாதம் சம்பளம் தரப்படும். அதாவது கிட்டத்தட்ட கடைசி வருடம் மட்டும் வருட சம்பளம் 6.92 லட்சம் ரூபாயாக இருக்கும். இவை அனைத்திற்கும் வருமான வரி கிடையாது. பென்சன் இல்லை அதே சமயம் இவர்களுக்கு பென்ஷன் இல்லை. 4 வருடத்தில் முதல் 6 மாதம் பயிற்சி அளிக்கப்படும். அதற்கு சம்பளம் உண்டு . தனிப்பட்ட இன்சூரன்ஸ், மெடிக்கல் இன்சூரன்ஸ் வழங்கப்படும். இந்த 4 வருட ராணுவ பணி காலத்தில், ஏதாவது ராணுவ சண்டையில் காயங்கள் ஏற்பட்டால் அதற்கு 44 லட்சம் ரூபாய் வரை, காயத்தை பொறுத்து நிவாரணமாக வழங்கப்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles