கேஸ் சிலிண்டர் மானியம் 2022 – Gas Cylinder Subsidy in Tamil 2022

கேஸ் சிலிண்டர் மானியம் 2022 – Gas Cylinder Subsidy in Tamil 2022 அனைவரது வீட்டிலும் சிலிண்டர் என்பது ஒரு அத்தியாவசிய பொருளாகி விட்டது என்பதினால் என்னவோ தெரியவில்லை சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தநிலையில் சிலிண்டர் மானியத்தில் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. அது குறித்த செய்தியை நாம் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

சிலிண்டர் மானியத்தில் புதிய விதிமுறை.. 

வீட்டு பயன்பாடு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் ஆகிய இரண்டின் விலையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்தது. இதன் காரணமாக கேஸ் சிலிண்டருக்கான மானியம் உயர்த்தப்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார் இருப்பினும் இந்த மானியம் தொகை இலவச சமையல் எரிவாய்வு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும், அதாவது பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற நபர்களுக்கு இந்த மானிய உயர்வு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் முன்பு, கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 21.05.2022 ஆம் தேதி, சனிக்கிழமை அன்று இந்த அறிவிப்புகளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

சிலிண்டர் விலை 2022 – தற்போதைய நிலவரம்:

டெல்லியில் 14.2 கிலோ கொண்ட வீட்டு பயன்பாடு சிலிண்டர் ரூ.1,003 என்ற விலையில் விற்பனையாகிறது. அரசு வெளியிட்டுள்ள தற்போதைய அறிவிப்பின்படி, உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு மானியத் தொகையாக ரூ.200 வழங்கப்படும். ஆக, அதன் விலை ரூ.803 ஆகும். 

உஜ்வாலா திட்டம் என்றால் என்ன?

உஜ்வாலா திட்டம் என்பது ஒரு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் திட்டமாகும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னெவென்றால் விறகு அடுப்புகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையிலும், ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டமானது கடந்த 2016 ஆம் ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்த தொடங்கியது. கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி நிலவரப்படி, நாடெங்கிலும் 9.7 கோடி மக்களுக்கு இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

யாரெல்லாம் தகுதியுடையவர்கள்?

இந்த மானியம் தொகையை யாரெல்லாம் பெறலாம் என்றால் பட்டியலினம், பழங்குடியினம், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள், தேயிலை தோட்ட பெண் பணியாளர்கள், தீவுகளில் வசிக்கக் கூடிய மக்கள் உள்ளிட்டோர் உஜ்வாலா திட்டத்தில் பயன் அடையலாம்.

வயது தகுதி:

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். இலவச சிலிண்டர் இணைப்பு திட்டத்தில் சேர்பவர்களின் வீட்டில் வேறு யார் பெயரிலும் இணைப்பு இருக்கக் கூடாது.

பதிவு செய்வது எப்படி?

இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு, நீங்கள் முதலில் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து அருகிலுள்ள LPG விநியோகஸ்தரிடம் கொடுக்க வேண்டும். இந்த படிவத்தில், விண்ணப்பித்த பெண் தனது முழு முகவரி, ஜன் தன் வங்கி கணக்கு மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணையும் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.

One comment

  1. Reading your article helped me a lot and I agree with you. But I still have some doubts, can you clarify for me? I’ll keep an eye out for your answers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *