ரேஷன் கார்டு திருத்தம் செய்ய மீண்டும் ஒரு அறிய வாய்ப்பு..!
சென்னையில் உள்ள 19 மண்டல் உதவி ஆணையர் அலுவலங்களில் ஜூன் 11-ம் தேதி முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமில் புதிய குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் சேவை நடைபெறும். நியாயவிலை கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரம் சான்று வழங்கப்படும்.
மேலும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியும் நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. எனவே, சிறப்பு முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் ஜூன் 11-ம் தேதியை நினைவில் வைத்துக்கொண்டு தங்கள் குடும்ப அட்டையில் திருத்த மேற்கொள்ள விரும்புவோர் செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.