23.5 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

தாய்வழி பராமரிப்பு! ரூ.33.56 கோடி செலவில் மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவு! வரலாறு படைக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தாய்வழி பராமரிப்பு! ரூ.33.56 கோடி செலவில் மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவு! வரலாறு படைக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழக மாணவர்களுக்கு இனி காலையில் சத்தான சிற்றுண்டி. நாளை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரையில் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.

தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வி தரத்தை அரசு பள்ளிகளில் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி கற்றலில் மாணவர்களின் கவனம் திசை திரும்ப கூடாது. காலை பசியோடு கல்வி கற்றல் கூடாது. இந்த திட்டத்தினால், மாணவர்கள் பசியின்றி கல்வி கற்றல் எளிதாகுகிறது. மாணவர்களின் அறிவாற்றல் வளர்ச்சியடைகிறது. வேறு என்னென்ன பயன்கள்?

ஆணுக்கு பெண் சரிநிகர் என்பது சாத்தியமான காலத்தில் வாழ்கிறோம். வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு இந்த திட்டம் பேருதவியாக இருக்கும். வேலைக்கு கிளம்பி செல்லும் அவசரத்தில் மாணவர்களுக்கு சத்தான ஆகாரத்தைச் சமைக்க நேரமெடுக்க தேவையில்லை. இனி அரசு மாணவர்களின் நலனை கவனித்து கொள்ளும்.
குழந்தைகளின் உடல் நலம் காக்கப்படும். அவர்களுக்கு தேவையான புரத சத்து, இரும்பு சத்து போன்றவைகளை கவனத்தில் கொண்டு, சத்தான காலை உணவு வழங்கப்படுகிறது.

உங்கள் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. வீட்டில் இது பிடிக்காது என்று உணவைத் தள்ளி வைக்கும் குழந்தைகள் கூட, நண்பர்களோடு சேர்ந்து சாப்பிடுகையில், சரியான ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்தியாவிலேயே… ஏன் உலகிலேயே முதன் முறையாக மாணவர்களுக்கு காலை வகுப்புகள் துவங்கும் முன்பு சத்தாண சிற்றுண்டி வழங்கி, அவர்களின் உடல் நலத்திலும் அக்கறை எடுத்துக் கொள்கிறது தமிழக அரசு. அதன் ஒரு பகுதியாக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை தொடக்க கல்வி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாளை முதல்வர் துவக்கி வைக்கிறார்.
மாணவர்களுக்கு வெறும் உணவு வழங்குவதோடு நம் கடமை முடிந்து விடவில்லை. அவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு, சுகாதாரமாகவும், சத்தான உணவாகவும் இருக்க வேண்டும் என கலைஞர், அவித்த முட்டை வழங்க உத்தரவிட்டார். வாரத்தில் ஐந்து நாட்கள் அவித்த முட்டையும், முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழமும் வழங்கப்பட்டது.

இதனால் சுமார் 5.7 மில்லியன் மாணவர்கள் பயனடைந்தனர். இந்தியா முழுவதுமே அப்போது இந்த திட்டம் பரபரப்பாக பேசப்பட்டது. பல மாநில அரசியல் தலைவர்களும் பாராட்டினார்கள்.

அதன் தொடர்ச்சியாக மாணவர்களின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளும் அரசாக இந்த அரசு விளங்குகின்றது. பள்ளியைத் தொடங்கும் பல குழந்தைகள் காலை உணவைத் தவிர்க்கிறார்கள் என்று ஆய்வு தெரிவிிக்கிறது. மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல பயணம் செய்ய வேண்டிய தூரம் மட்டுமே காரணமாக இல்லாமல், வீட்டில் இருக்கும் வறுமை, வேலைக்குச் செல்லும் தாய்மார்களால், சத்தான உணவை காலை நேரங்களில் சமைக்க ஏற்படுகிற சிரமம் என மாணவர்களின் உடல் நலன், வளரும் வயதில் பாதிப்பதை இந்த திட்டம் நிச்சயமாக சரி செய்யும். முதற்கட்டமாக  நாளை முதல் 15 மாவட்ட அரசு பள்ளிகளில், 292 கிராம பஞ்சாயத்துகளில் சுத்தமான முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் விரிவு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி காலை 5:30 – 7:45 மணிக்குள் சமையல் பணிகள் முழுவதையும் முடிக்கவும், காலை 8:15 – 8:45 மணிக்குள் காலை உணவை குழந்தைகளுக்கு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

இந்த காலை உணவு திட்டத்திற்கான உத்தரவில் கையெழுத்திட்ட பிறகு, தமிழக முதல்வர், தனது திருப்திக்கு எல்லையே இல்லை என்றும், இனி தமிழகம் உலகிற்கே முன்மாதிரியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இது ஒரு கனவுத் திட்டம் என்று கூறிய அவர், ஏழைக் குழந்தைகளின் படிப்பை முழுவதுமாக முடிக்க இந்தத் திட்டம் உதவும் என்றார்.

இந்த திட்டம், குழந்தைகள் வெறும் வயிற்றில் இல்லாமல் வகுப்பிற்கு வருவதை உறுதி செய்வது, மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைப்பது, குழந்தைகளின் இரும்புச் சத்து குறைபாட்டைப் போக்குவது என பல நலன்களைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக வளர்இளம் குழந்தைகளின் பசியைப் போக்கியதன் மூலம் தாய்வழிப் பராமரிப்பை கையில் செயல்படுத்தியிருக்க

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles