20.4 C
New York
Friday, September 13, 2024

Buy now

spot_img

தமிழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

தமிழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் தையல் கற்று கொடுக்கும் ஆசிரியர் ஒருவர் வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ மத போதனைகளை மாணவர்களிடம் புகுத்தியதற்காக பள்ளி நிர்வாகம் தற்போது அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.


பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்:-


கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கிட்டத்தட்ட 300 மாணவ, மாணவிகள் படித்து கொண்டிருக்கின்றனர். அந்த பள்ளியில் தையல் கலை பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. தையல் வகுப்பிற்கு வரும் மாணவிகளிடம் அந்த தையல் ஆசிரியர் இந்து மத கடவுள்களை பற்றி அவதூறாக பேசியும் கிறிஸ்தவ மத போதனைகளை வலுக்கட்டாயமாக சொல்லி கொடுப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.


மேலும், அந்த ஆசிரியர் பைபிளை படிக்க சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும், முட்டிபோட்டு பிரேயர் பண்ண சொல்லியும் கட்டாயப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளனர். நாங்கள் இந்து பகவத் கீதையை மட்டும் தான் படிப்போம், பைபிள் படிக்க மாட்டோம் என்று எவ்வளவு கூறியும் கேட்காமல் பைபிள்தான் நல்ல புத்தகம், பகவத்கீதை கெட்டது என சொல்லி தருகிறார் எனவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், அந்த மாணவிகளுடைய பெற்றோர்கள் இரணியல் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.


இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அந்த தையல் ஆசிரியர் மீது விசாரணை நடத்தி உண்மை என்ன என்பதை ஆராய்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத்தேர்வு குறித்தும் சில வரிகள் பேசியுள்ளார். மாணவர்களின் சிரமத்தை போக்கவே 35 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் எந்த பயமும் இல்லாமல் பொதுத்தேர்வை எழுதும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles