உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? | World Highest Waterfall in Tamil
உலகின் உயரமான நீர்வீழ்ச்சி | Ulagin Uyaramana Neer Veelchi உலகின் உயரமான நீர்வீழ்ச்சி : நண்பர்களுக்கு வணக்கம் நாம் இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் உலகின் உயரமான நீர்வீழ்ச்சி எது என்று பார்க்கலாம். பொது அறிவு கேள்விகளை படிப்பது நம்முடைய வேலைக்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில் நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு கற்று கொடுப்பதற்கு உதவியாக இருக்கும்.
ஏஞ்சல் நீர்வீழ்ச்சி:
இந்த நீர்வீழ்ச்சி தென் அமெரிக்கா கண்டத்தில் வெனிசுலா நாட்டில் கணைமா தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் 919 மீட்டர் ஆகும். இவ்வளவு உயரமான இந்த அருவி 2,648 அடி (807 மீட்டர்) வரை எந்த தடையும் இல்லாமல் நீர் ஊற்றுகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் நீர் தரையை அடைவதற்கு 14 நிமிடங்கள் எடுத்து கொள்கிறது. இந்த நீர் தரையை அடைவதற்கு முன்பு அங்கு வீசும் காற்றின் மூலம் பனிக்கூட்டம் போல பிரகாசிக்கிறது. ஏஞ்சல் நீர்வீழ்ச்சியில் இருந்து விழும் நீர் கெரெப் ஆற்றில் விழுந்து சுருண் ஆற்றை அடைகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த ஏஞ்சல் நீர்வீழ்ச்சியில் நீர் கொட்டுகிறது என அறிஞர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். செவ்விந்தியர்கள் இந்த நீர்வீழ்ச்சியை சுருண் மேரு என்று அழைத்து வந்தார்களாம். Tepui (தெபுய்) என்ற செங்குத்து மலைச்சரிவின் வழியாக இந்த நீர் வீழ்ச்சி பாய்கிறது.
பெயர்க்காரணம்:
அமெரிக்கா நாட்டை சேர்ந்த விமானியான ஜிம்மி ஏஞ்சல் 1933-ம் ஆண்டு பயணம் மேற்கொண்ட போது கண்டுப்பிடிக்கப்பட்டது. ஜிம்மி ஏஞ்சல் வெனிசுலாவில் தங்கத்தை தேடி பறந்து கொண்டிருக்கும் போது இந்த நீர்வீழ்ச்சியை பார்த்தார். இவரின் மூலமே இந்த உயரமான நீர்வீழ்ச்சி உலகிற்கு அறிமுகமாகியது. அதனால் ஏஞ்சல் என்ற பெயருடன் அவரின் நினைவாக இந்த நீர்வீழ்ச்சி இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறது. உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகள் அனைத்தும் ஏஞ்சல் நீர்வீழ்ச்சிகள் மூலம் அறிமுகப்படுத்தப்படுகிறது. சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு ஒரு சிறந்த இடம் என்றால் அது ஏஞ்சல் நீர்வீழ்ச்சி என்று சொல்லலாம். இறைவன் படைத்ததில் பலவிதமான அதிசயங்கள் உள்ளது. அதில் இந்த நீர்வீழ்ச்சியும் ஒன்று என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.
10 உலகின் உயரமான நீர்வீழ்ச்சிகள் பட்டியல் :
- ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (Anjel Falls) 979 மீட்டர் உயரம்
- துகேலா நீர்வீழ்ச்சி (Tugela Falls) 948 மீட்டர் உயரம்
- ட்ரெஸ் ஹெர்மனாஸ் நீர்வீழ்ச்சி (Tres Hermanas Falls) 914 மீட்டர் உயரம்
- ஓலோ உபெனா நீர்வீழ்ச்சி (Olo’upena Falls) 900 மீட்டர் உயரம்
- யும்பில்லா நீர்வீழ்ச்சி (Yumbilla Falls) 896 மீட்டர் உயரம்
- வின்னுபோசென் நீர்வீழ்ச்சி (Vinnufossen Falls) 860 மீட்டர் உயரம்
- பாலிஃபோசென் நீர்வீழ்ச்சி 850 மீட்டர் உயரம்
- ஜேம்ஸ் புரூஸ் நீர்வீழ்ச்சி (James Bruce Falls) 840 மீட்டர் உயரம்
- Brown Waterfalls 836 மீட்டர் உயரம்