25.8 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

ஆண்டுக்கு வெறும் ரூ.436 செலுத்தினால் ரூ.2 லட்சத்திற்கு காப்பீடு | அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய திட்டம்

ஆண்டுக்கு வெறும் ரூ.436 செலுத்தினால் ரூ.2 லட்சத்திற்கு காப்பீடு | அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய திட்டம்


பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana, ) : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு குடிமக்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் பல காப்பீட்டுத் திட்டங்களில் 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டமும் ஒன்று. இத்திட்டம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் ரூபாய் வரை பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கான மருத்துவக் காப்பீட்டை வழங்குகிறது. 

இதற்கு, ஒரு நபர் ஆண்டுக்கு ரூ.436 செலுத்தி, திட்டத்தின் பலன்களைப் பெற வேண்டும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்பது பாலிசிதாரர் ஒருவர் இறந்துவிட்டால், அவரது குடும்ப உறுப்பினர்கள் அல்லது பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY): என்ன செய்கிறது?

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்பது எந்தவொரு காரணத்திற்காகவோ பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு ஆயுள் காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. இது ஒரு வருட காப்பீடு, ஆண்டுதோறும் புதுப்பிக்கத்தக்கது. இந்தத் திட்டம் எல்ஐசி மற்றும் பிற ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் வழங்க அல்லது நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தற்போது வங்கிகள் அல்லது தபால் அலுவலகத்துடன் டை-அப் முறையில் இணைந்து இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 31, 2022ம் ஆண்டின் நிலவரப்படி, காப்பீட்டாளர்களால் இதுவரை தவணைத் தொகையாக ரூ.9,737 கோடி செலுத்தப்பட்டுள்ளது, அதேபோல் க்ளைமாக ரூ.14,144 கோடி திரும்ப செலுத்தப்பட்டுள்ளது.

PMJJBY திட்டத்தை பெறுவதற்கான தகுதி:

இத்திட்டத்தில் 18 முதல் 50 வயதுக்குட்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகங்களில் தனிப்பட்ட கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் சேர உரிமை உண்டு.

வங்கிகள் அல்லது தபால் அலுவலகம், ஒரு வங்கி அல்லது தபால் அலுவலக கணக்கு மூலம் மட்டுமே திட்டத்தில் சேர நபர் தகுதியுடையவர். ஆதார் என்பது வங்கி அல்லது தபால் நிலையத்திற்கான முதன்மை KYC ஆகும்.

பாலிசிதாரர் தனது வங்கி கணக்கில் பிரீமியம் தொகை தானாக டெபிட் ஆகும் படி ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும்.

PMJJBY அம்சங்கள் மற்றும் நன்மைகள்:- 

இந்தத் திட்டத்தின் கீழ், பாலிசிதாரர் ஆண்டுதோறும் ரூ. 456 செலுத்துவதன் மூலம் ரூ. 2 லட்சத்திற்கான டேர்ம் இன்சூரன்ஸ் காப்பீட்டைப் பெறுகிறார், இந்த தொகையான ஏதாவது காரணத்தினால் பாலிசிதாரர் மரணிக்கும் பட்சத்தில் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டு கவரேஜ் காலத்திற்கான பீரிமியம் தொகை மே 31 அல்லது அதற்கு முன்னதாகவோ குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் வங்கி கணக்கில் இருந்து தானாகவே டெபிட் செய்யப்படும். 

அதாவது பாலிசிதாரரின் கணக்கில் இருந்து ‘ஆட்டோ’ ஆப்ஷன் மூலமாக பிரீமியம் கழிக்கப்படுகிறது.PMJJBY திட்டத்தின் கீழ் ரூ. 436ல், 395 ரூபாய் காப்பீட்டாளருக்குச் செல்கிறது, அதே சமயம் ரூ. 30 முகவர் அல்லது வங்கிக்கு செலவுகளுக்காகவும், மீதமுள்ள ரூ. 11 வங்கிக்கான நிர்வாக செலவுக்காகவும் செலுத்தப்படுகிறது.

PMJJBY திட்டத்தின் கீழ் பதிவு செய்த 45 நாட்களுக்குப் பிறகு, காப்பீட்டு திட்டத்தின் கீழ் பலன் பெருவது பொருந்தும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles