Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய வசதி அறிமுகம்!
தபால் அலுவலகத் துறையில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை தபால்துறை வெளியிட்டு உள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண் மூலம் தேவையான தகவல்களை எளிதாகப் பெற IVR சேவையை தபால் துறை அறிமுகம் செய்து உள்ளது. இந்தச் சேவை நாட்டின் கிராமப்புறத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களுக்கு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வசதி அறிமுகம்:
இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது முக்கியமான ஒன்றாகும். கொரோனா பேரிடர் காலத்தில் நாம் அதிக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள் தற்போது முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.அந்த வகையில் மக்களின் முக்கிய தேர்வாக போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் சேமிப்பு உள்ளன. போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தபால் துறையும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை புரிந்து வருகிறது. அந்த வகையில் தற்போது வாடிக்கையாளர்களுக்கு அருமையான செய்தியை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இனி பல்வேறு சேவைகளுக்கு தபால் அலுவலக கிளைகளுக்கு அலைய வேண்டியதில்லை. இந்திய அஞ்சல் அலுவலகம், அதன் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களின் வசதிக்காக, தொலைபேசி வாயிலான குரல் மூலம் பதிலளிக்கும் வாடிக்கையாளர் (IVR) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் எங்கேயும் அலையாமல் தங்கள் செல்போன்களில் இருந்து இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தபால் துறை தெரிவித்து உள்ளது.
இந்த சேவை மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் முதலீடு, ஏடிஎம் கார்டை தடை செய்தல், புதிய கார்டுகள் பெறுதல் மற்றும் பிபிஎஃப், என்எஸ்சி போன்றவற்றில் பெறப்பட்ட வட்டி போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய அஞ்சல் அலுவலகம் இந்தச் சேவையைப் பெற வாடிக்கையாளர்கள் பெற 18002666868 ஐ இலவச எண்ணையும் வெளியிட்டுள்ளது.
உதாரணத்திற்கு வாடிக்கையாளர் PPF, NSC, சுகன்யா சம்ரித்தி அல்லது மற்ற திட்டங்களைப் பற்றிய விரிவான தகவல்களைப் பெற தனது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து இந்திய அஞ்சல் சேவையின் இலவச எண்ணை அழைக்க வேண்டும். மேலும் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தகவல்களைப் பெறுவார்கள்.