தமிழ்நாடு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டம் Employment Jobs 2023 | Employment Jobs Today | Latest Tn Jobs 2023 | Tamil Nadu Scholarship Scheme for Unemployed Youth

Employment Jobs 2023 |  Employment Jobs Today |  Latest Tn Jobs 2023 | Tamil Nadu Scholarship Scheme for Unemployed Youth | Apply now |   

தமிழ்நாடு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டம்

1. (அரசு ஆணை (நிலை) எண்.72, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (ஆர்2) துறை, நாள்.25.08.2006) 2. (அரசு ஆணை (நிலை) எண்.172, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (ஆர்2) துறை நாள்.16.11.2006) 3. (அரசு ஆணை (நிலை) எண்.215, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (ஆர்2) துறை நாள்.25.10.2010) 4. (அரசு ஆணை (நிலை) எண்.19 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (ஆர்2) துறை நாள்.20.02.2017)

          பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்குரிய தகுதிகள்

1. கல்வித்தகுதி:

அ) பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்
(ஈ) பட்டதாரிகள் / முதுகலைப் பட்டதாரிகள் (பொறியல், மருத்துவம், கால்நடை மருத்துவம் விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப் படிப்புகள் நீங்கலாக).

(ஆ) பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள்

(இ) +2 வகுப்பில் தேர்ச்சி / அதற்கு சமமான தகுதியினர் (பட்டயப் படிப்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தோர் போன்றவர்கள்)

2. பதிவு செய்து காத்திருப்புக்

காலம் :

 •   விண்ணப்ப நாளுக்கு முந்தைய காலாண்டின் முடிவில் ஐந்தாண்டுகளுக்கு குறையாது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து வேலைக்குக் காத்திருக்க வேண்டும்.

3. வருமானம் :

 • விண்ணப்பதாரரது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.50,000/-க்கு மேற்படக் கூடாது.

4. வயது வரம்பு:

 • வேலைவாய்ப்பற்ற உதவித்தொகைக்கான பட்டி தயாரிக்கும் நாளில் 40 வயது பூர்த்தி அடைந்திருக்க கூடாது. ஆதிதிராவிடர் / பழங்குடியின விண்ணப்பதாரர்கள் 45 வயது பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது.

5. இருப்பிடம்:

 • விண்ணப்பதாரர் தம்முடைய பள்ளிக் கல்வி அல்லது கல்லூரிக் கல்வியை முழுமையாகத் தமிழ்நாட்டிலேயே படித்திருக்க வேண்டும் அல்லது அவருடைய பெற்றோர்களில் ஒருவர் அல்லது காப்பாளர் 15 ஆண்டுகளுக்குக் குறையாமல் தமிழகத்தில் வசித்து வந்திருக்க வேண்டும்.

6. வேலைவாய்ப்பின்மை:

 • விண்ண்ப்பதாரர் அரசுத்துறை / தனியார் துறையில் எந்தவிதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பில் ஈடுபட்டவராகவோ இருத்தல் கூடாது. மேலும் விண்ணப்பதாரர் தனியாரிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ வேறு எந்த வகையிலும் எந்தவிதமான உதவித் தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது. 7. பள்ளி, கல்லூரிகளுக்கு அன்றாடம் சென்று பயிலும் மாணவ மாணவிர்கள்:
 • விண்ணப்பதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ மாணவியராக (Regular Students) இருத்தல் கூடாது. இந்த நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக் கல்வி கற்கும் விண்ணப்பதாரர்களுக்குப் பொருந்தாது.

8. ஏற்கனவே பயன் பெற்றவர்கள்:

 • ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு 1993 இல் நிறுத்தம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பற்றோர் நிவாரணத் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மனுதாரர்களுக்கு இப்புதிய வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் நிர்ணயம் செய்யப்படுகின்ற வயது வரம்புகளுக்குட்பட்டு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
  தகுதி  மாதம் வழங்கப்படும் உதவி தொகை
  10-ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200
  10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300
  12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மற்றும் அதற்கு சமமான தகுதிபெற்றவர்களுக்கு ரூ.400
  பட்டதாரிகள் முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.600

                

  


விண்ணப்பித்தல் மற்றும் தொடர்ந்து பயன்பெறுதல் பற்றிய விவரம்:


1. வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு வருவாய்த்துறையினால் வழங்கப்படும் சான்று பெற்று மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
2. வேலைவாய்ப்பகத்திலிருந்து உதவித்தொகை பெற விண்ணப்பப் படிவம் கிடைத்த 30 நாட்களுக்குள் தனது மாவட்டத்திற்குள் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியின் கிளையில் சேமிப்புக் கணக்கைத் (Savings Bank account) தொடங்கி கணக்கு எண்.(Account Number) கிளையின் முழு முகவரி, கிளை குறியீட்டு எண் (Branch Code) உள்ளிட்ட விவரங்களை விண்ணப்பப் படிவத்தில் அமைந்துள்ளவாறு தெரிவிக்க வேண்டும்.
3. வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை காலாண்டு வாரியாக கணக்கீடு செய்யப்பட்டு அந்தந்தக் காலாண்டு முடிவுற்ற பின்னர் விண்ணப்பதாரருடைய கணக்கில் செலுத்தப்படும்.
4. வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை மூன்று ஆண்டுகளுக்கு அல்லது ஏனையோர்களைப் பொறுத்தவரையில் 40 வயது முடிவுறும் வரையிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரைப் பொறுத்தவரையில் 45 வயது முடிவுறும் வரையிலும் வழங்கப்படும்.
5. வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற்றுவரும் காலத்தில் அரசுத் துறையிலோ அல்லது தனியார் துறையிலோ பணிநியமனம் பெற்றாலோ அல்லது சுய வேலைவாய்ப்பில் ஈடுபட்டாலோ அது தொடர்பான விபரங்களை உடனடியாக உரிய வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குத் தெரிவிக்க வேண்டியது விண்ணப்பதாரரின் பொறுப்பாகும். அரசுத் துறையிலோ அல்லது தனியார் துறையிலோ பணிநியமனம் பெற்றாலோ அல்லது சுயவேலைவாய்ப்பில் ஈடுபட்டாலோ வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்குவது நிறுத்தம் செய்யப்படும்.
6. வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறும் காலத்தில் பதிவைத் தொடர்ந்து புதுப்பித்து வர வேண்டும்.
7. உண்மைக்கு மாறான விவரங்கள் அளித்து உதவித்தொகை பெறுபவரின் பதிவு இரத்து செய்யப்படும்.
8. இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவோர் மூன்று வருடத்திற்கு தொடர்ந்து உதவித்தொகைப்பெற ஆண்டுக்கு ஒருமுறை அதாவது 5வது காலாண்டிலும் 9வது காலாண்டிலும் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டுள்ளவாறு சுயஉறுதி ஆவணத்தை (Self affidavit) உரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வமயம் வங்கிக் கணக்குப் புத்தகம், வேலைவாய்ப்பு அலுவலக புதுப்பித்தல் அடையாள அட்டை மற்றும் இதர சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
9. வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகையினை வாங்கினால் தங்களது பரிந்துரை வாய்ப்பு பறிபோகுமோ என பதிவுதாரர்கள் அச்சப்படத் தேவையில்லை. உதவித்தொகை வழங்கப்படும் காலத்திலும் பதிவுதாரர்களது பெயர் அறிவிக்கப்படும் காலியிடங்களுக்கு தொடர்ந்து விதிமுறைப்படி பரிந்துரைக்கு பரிசீலிக்கப்படும்.

                                           வருவாய்த்துறை சான்று
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ் (வருமானம், வேலையின்மை, தமிழ்நாட்டிலேயே கல்வி கற்றிருத்தல் அல்லது பெற்றோர் அல்லது பாதுகாவலர், கணவன் அல்லது மனைவி தமிழ்நாட்டில் குடியிருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது).
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ் (வருமானம், வேலையின்மை, தமிழ்நாட்டிலேயே கல்வி கற்றிருத்தல் அல்லது பெற்றோர் அல்லது பாதுகாவலர், கணவன் அல்லது மனைவி தமிழ்நாட்டில் குடியிருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது).

இச்சான்றிதழ் கீழ்க்கண்ட படிவத்தில் வருவாய்த் துறையில் வருவாய் ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலரிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் அளிக்கப்பட வேண்டும்.
1. திரு/திருமதி/ செல்வி. என்ற வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ள மனுதாரரின் தாய்/தந்தை/கணவன்/மனைவி/பாதுகாவலர் ஆகிய திரு/திருமதி என்ற முகவரியில் வசித்து வருகிறார். அவர்கள் இவரது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50,000/-க்கு மிகாமல் உள்ளது எனச்சான்று அளிக்கப்படுகிறது. 2. திரு/திருமதி/ செல்வி . என்ற வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ள மனுதாரர் அரசு அல்லது தனியார்த் துறையில் எந்தவிதமான ஊதியம் பெறும் பணியிலும் இல்லை என்றும், இவர் சுய வேலைவாய்ப்பில் ஈடுபடவில்லை என்றும் இவர் முழுவதுமாக வேலையில்லாமலேயே இருந்து வருகிறார் என்றும் சான்று அளிக்கப்படுகிறது.
3. திரு/திருமதி/ செல்வி என்ற வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளமனுதாரர் அரசு அல்லது தனியார்த் துறை அல்லது இதர ஆதாரங்களின் வழி எந்தவிதமான உதவித்தொகையும் பெற்று வருபவர் அல்லர் என்றும் சான்று அளிக்கப்படுகிறது.
4. திரு/திருமதி/ செல்வி . என்ற வேலைவாய்ப்பற்ற மனுதாரர் தமிழ்நாட்டிலேயே தனது பள்ளி அல்லது கல்லூரிக் கல்வியினை முடித்தவர் அல்லது இம்மனுதாரரின் பெற்றோரில் தாய் / தந்தை அல்லது பாதுகாவலர் அல்லது கணவன் அல்லது மனைவி தமிழ்நாட்டிலேயே 15 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருந்து வருபவர் என்று சான்று அளிக்கப்படுகிறது.
5. திரு/திருமதி/ செல்வி என்ற வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ள மனுதாரர் அன்றாடம் பள்ளி அல்லது கல்லூரிக்குச் சென்றுவரும் மாணவர் அல்லது மாணவியர் அல்லர் என்று சான்று அளிக்கப்படுகிறது.

                          


அதிகாரப்பூர்வ அறிவிப்பு  PDF Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க  Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்  Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *