DRDO-ல் 630 காலிப்பணியிடங்கள். கேட் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் – முழு விவரம்
630 விஞ்ஞானிகள் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெளியிட்டுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: 630
டிஆர்டிஓ ‘பி’ நிலை விஞ்ஞானி பதவி 579 காலியிடங்கள்
அறிவியல் தொழில்நுட்பத் துறை – ‘பி’ நிலை விஞ்ஞானி பதவி – 8 காலியிடங்கள்
விமான மேம்பாட்டு அமைப்பு – ‘பி’ நிலை விஞ்ஞானி/பொறியியாளர் பதவி 43 காலியிடங்கள்
தொடர்புடைய பொறியியல் துறைகளில் இளம் நிலை பட்டம் பெற்றவர்களும், (அல்லது) அறிவியல் துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
சம்மந்தப்பட்ட துறைகளில் கேட் தேர்வில் தகுதி மதிப்பெண்கள் வைத்திருக்க வேண்டும்.
முக்கியமான நாட்கள்:
இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: ஜுலை 29
2 தாள்கள் கொண்ட எழுத்துத் தேர்வு : அக்டோபர் 16
வயது வரம்பு: டிஆர்டிஓ ‘பி’ நிலை விஞ்ஞானி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஜுலை 29 அன்று, 28-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
அறிவியல் தொழில்நுட்பத் துறை – ‘பி’ நிலை விஞ்ஞானி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஜுலை 29 அன்று, 35-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
விமான மேம்பாட்டு அமைப்பு – ‘பி’ நிலை விஞ்ஞானி/பொறியியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஜுலை 29 அன்று, 30-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
விண்ணப்பம் செய்வது எப்படி? https://rac.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, விதிமுறைகள், சம்பளம், விண்ணப்ப செயல்முறை ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சகத்தின் DRDO இணையத்தளத்தில் உள்ள DIRECT RECRUITMENT FOR THE POSTS OF SCIENTIST ‘B’IN DRDO (630 VACANCIES) – https://rac.gov.in/download/advt_140_v3.pdf என்ற விரிவான ஆட்சேர்ப்பு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.