WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – சேட் பக்கத்தில் ஸ்டேட்டஸ் அப்டேட்! புதிய அம்சம்!

WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – சேட் பக்கத்தில் ஸ்டேட்டஸ் அப்டேட்! புதிய அம்சம்!

இப்போது, வாட்ஸ்அப் பயனர்கள் அனைவரும் தங்களது சேட் பக்கத்தில் ஸ்டேட்டஸ் அப்டேட்களை காணும் வகையில் புதிய அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் இன்று (மே.5) முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

புதிய அம்சம்:-

உலகின் முன்னணி தகவல் தொடர்பு தளமான வாட்ஸ்அப் செயலி தனது பயனர்களை கவரும் விதத்தில் அவ்வப்போது சில அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. இதில் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருக்கும் ஒரு அம்சம் என்னவென்றால் அது ஸ்டேட்டஸ் அம்சம் தான். இந்த அம்சம் மூலம் பயனர் ஒருவர் தனது நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம், வீடியோ, செய்திகள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். இந்த தரவுகள் அனைத்தும் அடுத்த 24 மணிநேரத்திற்கு காட்டப்படும். இந்த பதிவுகளை பார்ப்பதற்காக நாம் ஸ்டேட்டஸ் என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

இப்படி இருக்க, ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் எதிர்கால புதுப்பிப்புகளுக்கான அரட்டை பட்டியலில் இப்போது தோன்றும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த WABetaInfo தகவலின் படி, ‘iOS 22.10.0.72க்கான WhatsApp பீட்டாவின் புதிய பதிப்பு. எதிர்கால புதுப்பிப்புக்காக அரட்டைகள் பட்டியலில் ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகளைக் காண்பிக்கும் பணியில் WhatsApp செயல்படுகிறது!’ என்று தெரிவித்திருந்தது. இப்போது வாட்ஸ்அப் செயலியின் இந்த அம்சம் இன்று (மே.5) முதல் பயன்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ் அப்டேட்களும் சேட் பக்கத்தில் தெரியும் என்றும் இது தற்காலிகமானதாக இருக்கும் என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. கூடுதலாக, வாட்ஸ்அப் பயனர்கள் விரைவு ரியாக்சன் அம்சத்துடன் எமோஜியைப் பயன்படுத்தி ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகளுக்கு பதிலளிக்க முடியும். அந்த வகையில் வாட்ஸ்அப் 8 புதிய எமோஜிகளை ரியாக்ஷன்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில், கண்களில் இதயத்துடன் சிரித்த முகம், ஆனந்தக் கண்ணீருடன் இருக்கும் முகம், ஓப்பன் மவுத், சோகமான முகம், கைதட்டல்கள், பார்ட்டி பாப்பர் மற்றும் நூறு புள்ளிகள் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *