இந்தியா முழுவதும் தபால் துறையில் காலியாக உள்ள 40,889 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி பிராஞ்ச் போஸ்டர் மாஸ்டர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் https://indiapostgdsonline.gov.in/என்ற அதிகாரப்பூர்வ இனையத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க இறுதி நாள் 16-02-2023. இந்த பணி பற்றிய முழு விவரங்களுக்கு கிழே முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.காலியிடங்கள், கல்வி தகுதி, வயது, பணியிடங்கள், சம்பளம் பற்றிய முழு விவரங்கள் அறிந்த பின்பு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.
தபால் துறை வேலை வாய்ப்பு Notification Details: –
- பணிகள்: –பிபிஎம் (Branceh Post Master)பிரிவு மற்றும் Assistant Branch Postmaster (ABPM/Dak Sevak) பிரிவில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பணிகள் காலியாக இருக்கின்றன.
- காலிப்பணியிடங்கள்: – 40,889 பணிகள் நிரப்பவுள்ளன.
- கல்வி தகுதி: – இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.
- ஊதியம்: –பிபிஎம் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.12 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.29,380 வரையும் சம்பளம் கிடைக்கும். ஏபிபிஎம்/Dak Sevak பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.24,470 வரை சம்பளம் வழங்கப்படும்.
- வயது விவரம்: – பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயதை எட்டியிருக்க வேண்டும். அதிகபட்சம் என்றால் விண்ணப்பத்தாரர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில் ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது முதல் 15 வயது வரை வயது தளர்வு உண்டு.
- தேர்வு முறை: – விண்ணப்பம் செய்வோர் மதிப்பெண் வாரியாக ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு பணிக்கு நியமனம் செய்யப்படுவார்கள். இதன்மூலம் எழுத்து தேர்வு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
- விண்ணப்ப கட்டணம்: –பதிவு கட்டணம் – ரூ.100
- விண்ணப்பிக்கும் முறை: – Online
- முகவரி: –indiapostgdonline.gov.in
- ஆரம்ப தேதி: – 28/01/2022
- கடைசி நாள்: – 16/02/2023
தபால் துறை வேலை வாய்ப்பு விண்ணப்பிக்கும் லிங்க்: –
- கிழே கொடுக்கப்பட்டுள்ள தமிழக தபால் துறையில் அறிவிப்பை கவனமாக படித்த பின்னர் குறிப்பிட்ட தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும்.
தபால் துறை வேலை வாய்ப்பு முழு விவரம்:
- ஆன்லைனில் விண்ணப்பிக்க: – Click Here
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: – Click Here
- அதிகாரப்பூர்வ இணையதளம் : – Click Here
விண்ணப்பிப்பது எப்படி: –
- விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- விண்ணப்பிக்கும் நபர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
- விண்ணப்பிக்கும் நபர் முழு அறிவிப்பு கவனமாக படிக்கவும்.
- தகுதியுள்ள விண்ணப்பதாரர் மட்டுமே விண்ணப்பிக்கும். செயல்முறையைத் தொடங்கவும்
- கேட்கப்பட்டுள்ள ஆவணங்கள் & சான்றிதழை பதிவேற்றவும்.
- இறுதியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும் அல்லது அனுப்பவும்.
- மேலும் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.