அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுகிறேன் | சுரேஷ் ரெய்னா அறிவிப்பு

அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ரெய்னா அறிவித்துள்ளார். தனது ஓய்வு குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ரெய்னா என்னுடைய நாட்டையும், மாநிலத்தையும் முன்னிறுத்தும் பிரதிநிதியாக நான் இருந்தது, மிக மிக பெருமைமிக்க மரியாதைக்குரிய தருணமாக எனக்கு இருந்திருக்கிறது. இந்த நேரத்தில், அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் நான் எனது ஓய்வை அறிவிக்க விரும்புகிறேன்.


மேலும் பிசிசிஐ, உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கம், சென்னை ஐபிஎல் குழுமம், பிசிசிஐ-யின் முன்னாள் துணை இயக்குநர் ராஜீவ் ஷகுலா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். என்னுடைய ரசிகர்கள் என்மீது வைத்த தொடர் நம்பிக்கைக்கும், அவர்களின் ஆதரவுக்கும் நன்றி & என்று தெரிவித்துள்ளார்.


சக வீரர்களைத் கொண்டாடும் விதம் மற்றும் அவர்களின் வெற்றியைத் தன் வெற்றியாக கொண்டாடும் கிரிக்கெட் வீரர் என்றால், அது நிச்சயம் இந்திய அணியில் ‘டெக்னிக்கல் கிங்’ சுரேஷ் ரெய்னாதான். அவர் இப்போது ஓய்வை அறிவித்திருப்பது, பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது