LPG கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய விரும்புவோர் கவனத்திற்கு – எளிய வழிமுறைகள் இதோ!

LPG கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய விரும்புவோர் கவனத்திற்கு – எளிய வழிமுறைகள் இதோ!


இந்தியாவில் எரிவாயு சிலிண்டரை ஆன்லைன் வாயிலாக வீட்டிலிருந்தபடியே புக் செய்யலாம். எவ்வாறு புக் செய்வது என்பது குறித்த வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

சிலிண்டர் புக்கிங்:-


இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் முக்கிய அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக உள்ளது. ஒரு மாதத்திற்கு 1 அல்லது 2 சிலிண்டர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகளும், வியாபாரிகளுக்கும் மாதாந்திர பட்ஜெட்டில் சிலிண்டர் விலைக்காக பெரும் தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டியதாக உள்ளது என்று கவலை தெரிவிக்கின்றனர். தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளது.

அதே போல வர்த்தக சிலிண்டர் விலை 2000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாதந்தோறும் சிலிண்டர் நிறுவன அலுவலகத்திற்கு நேரடியாக சென்றோ அல்லது மிஸ்டு கால் மூலமாகவும் சிலிண்டர் புக்கிங் செய்யலாம். தற்போது ஆன்லைன் மூலமாகவும் எளிதாக சிலிண்டர் புக்கிங் செய்யலாம். . Indane Gas, HP Gas மற்றும் Bharat Gas ஆகிய அனைத்து எரிவாயு விற்பனை நிறுவனங்களும் எல்பிஜி முன்பதிவு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.


ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கு கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. இந்த முறை LPG முன்பதிவு செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் வசதியான முறை ரீஃபில் எந்த நேரத்திலும், எங்கும் பதிவு செய்யலாம். மேலும் இதில் எளிதான கட்டண முறை உள்ளது. டெலிவரி கண்காணிப்பு சேவையும் உள்ளது. சிலிண்டர் வாடிக்கையாளர்கள் அந்தந்த நிறுவனங்களில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.