பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விலை கிலோ 40 ரூபாய் மட்டுமே

பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை – அமைச்சர் ஐ.பெரியசாமி

தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைவு ஆகியவற்றின் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது.

கடந்த வாரம் ரூ60 முதல் ரூ 80 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ100ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ105 முதல் ரூ125வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உணவங்கள் நடத்துபவர்கள் தக்காளி வாங்கும் அளவை கணிசமாக குறைத்துள்ளனர்.