தமிழகத்தில் மே 14 முதல் பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாதம் விடுமுறை – முழு ஆண்டுத்தேர்வு தொடக்கம்!

தமிழகத்தில் மே 14 முதல் பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாதம் விடுமுறை – முழு ஆண்டுத்தேர்வு தொடக்கம்!


தமிழகத்தில் பயிலும் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நேற்று முழு ஆண்டு தேர்வு நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேர்வை திட்டமிட்டபடி நடத்த தேர்வு வாரியம் உத்தரவு விடப்பட்டுள்ளது.


முழு ஆண்டு தேர்வு:-


இரண்டு வருடமாக கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் இரண்டாம் அலை மற்றும் மூன்றாவது அலையால் மூடப்பட்ட பள்ளிகள் பிப்ரவரி மாதத்தில் திறக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பள்ளிகளுக்கு அதிகமான விடுமுறைகள் விடப்பட்டதால் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் கூட வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மாணவர்களுக்கு கண்டிப்பாக இந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.


வழக்கமான முறையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து ஏப்ரல் முதல் வாரம் வரை தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறை விடப்படுவது வழக்கம். அதுமட்டுமின்றி ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் முழு ஆண்டு தேர்வு நடத்தப்பட்டு மே மாதம் முதல் வாரத்தில் இருந்து ஜூன் மாதம் வரை விடுமுறை விடப்பட்டிருக்கும். மேலும் மாணவர்களுக்கு அதிகமான விடுமுறை விடப்பட்டதால் மே மாதத்தில் தேர்வுகளை நடத்த முடிவு செய்தனர். அதன்படி ,1 முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மே 13 வரை தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்த நிலையில், நேற்று தேர்வுகள் நடத்தப்பட்டது.மே 14ம் தேதியில் இருந்து 1 மாதம் வரை விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளனர்.


இருப்பினும்.தனியார் பள்ளிகளில், கணினி அறிவியல், அபாகஸ் கணிதம் கற்றல், ஒழுக்கக் கல்வி போன்ற முக்கிய பாடங்கள் அல்லாத பாடங்களுக்கான தேர்வு துவங்கியுள்ளது. இதையடுத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், சூழல் அறிவியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு, நாளை முதல் தேர்வுகள் நடக்கின்றன. மே 7ம் தேதி மற்றும் 8ம் தேதி கிழமைக்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் தவிர, மற்ற நாட்களில் தேர்வுகளை தொடர்ந்து நடத்தி முடிக்க, அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.