தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வருகின்ற 16 ஆம் தேதி பொது விடுமுறை என்று தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


பொது விடுமுறை:-


தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் பொது மக்களின் நலன் கருதி அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்தவும் அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி அன்று தமிழகத்தில் 1-12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே நடத்த திட்டமிடபட்டிருந்த திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. இந்த வருடம் மே மாதம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அதன்படி, தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 23ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், ஜூன் 17 வெளியிடப்படும். மேலும் அடுத்தாக, 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் 13 ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 13 ஆம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.


இந்நிலையில் தற்போது வருகின்ற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 14 ஆம் தேதியும், அடுத்தாக 15 ஆம் தேதி புனித வெள்ளி அன்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதனை தொடர்ந்து, இரு நாட்கள் விடுமுறையை தொடர்ந்து 16 ஆம் தேதியும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அடுத்தாக, 18 ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *