இது உலகின் வேகமான விலங்குகளின் பட்டியல் ஆகும். இது விலங்குகளின் வகைப்படிப் பட்டியல் இடப்பட்டுள்ளது.
உலகின் வேகமான நில விலங்கு சிவிங்கிப்புலி ஆகும். இதன் வேகம் மணிக்கு 109.4-120.7 கி.மீ. (68.0-75.0 மைல்) எனப் பதியப்பட்டுள்ளது. உலகின் வேகமான பறவை பொரி வல்லூறு ஆகும். இதுவே விலங்கு உலகத்தின் வேகமான உயினமும் ஆகும். இறையைப் பிடிக்க இது வேகமாகக் கீழ் இறங்கும் வேகமானது மணிக்கு 389 கி.மீ. (242 மைல்) ஆகும். உலகின் வேகமான மீன் கருப்பு மர்லின் ஆகும். இதன் வேகம் மணிக்கு 129 கி.மீ. (80 மைல்) எனப் பதியப்பட்டுள்ளது. (புதிய ஆய்வுகளின் படி இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 58 மைல் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 70 + மைல் வேகம் தவறு எனக் குறிப்பிடப்படுகிறது.)
வேகத்தின் அடிப்படையில் விலங்குகளின் பட்டியல் :-
தரவரிசை | விலங்கு | அதிகபட்ச வேகம் | வகுப்பு |
---|---|---|---|
1 | பொரி வல்லூறு | 389 km/h (242 mph)[1][2] | பறவை |
2 | பொன்னாங் கழுகு | 240-320 km/h (150-200 mph) | பறவை |
3 | வெள்ளைத்தொண்டை ஊசிவால் உழவாரன் | 169 km/h (105 mph)[3][4][5] | பறவை |
4 | ஐரோவாசிய ஹாபி வல்லூறு | 160 km/h (100 mph)[6] | பறவை |
5 | கப்பற்பறவை | 153 km/h (95 mph)[7] | பறவை |
6 | மாடப்புறா | 148.9 km/h (92.5 mph)[8] | பறவை |
7 | தூண்டு-இறக்கை வாத்து | 142 km/h (88 mph)[9] | பறவை |
8 | கருப்பு மர்லின் | 129 km/h (80 mph) | மீன் |
9 | கிர் வல்லூறு | 128 km/h (80 mph) | பறவை |
10 | சாம்பல் தலை அல்பட்ரோஸ் | 127 km/h (79 mph)[10][11][note 1] | பறவை |
11 | சிவிங்கிப்புலி | 109.4-120.7 km/h (68.0-75.0 mph)[a] | பாலூட்டி |
12 | செயில்மீன் | 109.19 km/h (67.85 mph) | மீன் |
13 | அனா ஓசனிச்சிட்டு | 98.27 km/h (61.06 mph)[17] | பறவை |
14 | கத்தி மீன் | 97 km/h (60 mph)[18] | மீன் |
15 | பிராங்கொம்பு | 88.5 km/h (55.0 mph)[b] | பாலூட்டி |
1 | ஸ்பிரிங்போக் | 88 km/h (55 mph)[23][24] | பாலூட்டி |
17 | நீல வில்டேபீஸ்ட் | 80.5 km/h (50.0 mph)[c] | பாலூட்டி |
18 | சிங்கம் | 80.5 km/h (50.0 mph)[28] | பாலூட்டி |
19 | புல்வாய் | 80 km/h (50 mph)[29] | பாலூட்டி |
பறவைகள்:-
- உயிரினம் – பதியப்பட்ட அதிகபட்ச வேகம்
- பொரி வல்லூறு – 389 km/h (242 mph)[1][2]
- பொன்னாங் கழுகு – 240-320 km/h (150-200 mph)
- வெள்ளைத்தொண்டை ஊசிவால் உழவாரன் – 169 km/h (105 mph)[3][4][5]
- ஐரோவாசிய ஹாபி வல்லூறு – 160 km/h (100 mph)[6]
- கப்பற்பறவை – 153 km/h (95 mph)
- மாடப்புறா – 148.9 km/h (92.5 mph)
- தூண்டு-இறக்கை வாத்து – 142 km/h (88 mph)
- சிவப்பு மார்பு முக்குளிப்பான் வாத்து – 129 km/h (80 mph)[30]
- கிர் வல்லூறு – 128 km/h (80 mph)
- சாம்பல் தலை அல்பட்ரோஸ் – 127 km/h (79 mph)[note 1]
- அனா ஓசனிச்சிட்டு – 98.27 km/h (61.06 mph)[17]
- தீக்கோழி – 96.6 km/h (60 mph)[31]
ஊர்வன:-
- உயிரினம் – பதியப்பட்ட அதிகபட்ச வேகம்
- மத்திய தாடி டிராகன் – 40 km/h (25 mph)[32]
- பச்சைப் பேரோந்தி – 35 km/h (22 mph)[33]
- பேராமை – 35.28 km/h (21.92 mph)[34]
- கருப்பு மாம்பா – 23 km/h (14 mph)[35]
- கொமோடோ டிராகன் – 21 km/h (13 mph)[36]
மீன்:-
- உயிரினம் – பதியப்பட்ட அதிகபட்ச வேகம்
- கருப்பு மர்லின் – 129 km/h (80 mph)[37]
- செயில்மீன் – 109.19 km/h (67.85 mph)[38]
- கத்தி மீன் – 97 km/h (60 mph)[18]
- மஞ்சள் துடுப்பு சூரை மீன் – 76 km/h (47 mph)[39]
- குட்டைத்துடுப்பு மகோ சுறா – 72 km/h (45 mph)[40]
பாலூட்டிகள் :-
- உயிரினம் அதிகபட்ச வேகம்
- மெக்சிக வால் வவ்வால் 160 km/h (99 mph)[41]
- சிவிங்கிப்புலி 109.4-120.7 km/h (68.0-75.0 mph)[d]
- பிராங்கொம்பு 88.5 km/h (55.0 mph)[e]
- ஸ்பிரிங்போக் 88 km/h (55 mph)[23][24]
- வில்டேபீஸ்ட் 80.5 km/h (50.0 mph)[f]
- சிங்கம் 80.5 km/h (50.0 mph)
- புல்வாய் 80 km/h (50 mph)
- முயல் 80 km/h (50 mph)
- சாம்பல் வேட்டைநாய் 74 km/h (46 mph)[g]
- குழிமுயல் 72 km/h (45 mph)[h]
- ஆப்பிரிக்கக் காட்டு நாய் 71 km/h (44 mph)[i]
- கங்காரு 71 km/h (44 mph)[j]
- குதிரை 70.76 km/h (43.97 mph)[57]
- ஆசியக் காட்டுக் கழுதை 70 km/h (43 mph)[k]
- தொம்சன் சிறுமான் 70 km/h (43 mph)[l]
- கயோட்டி கோநாய் 65 km/h (40 mph)[m]
- சாதாரண டால்பின் 65 km/h (40 mph)[n]
- வரிக்குதிரை 64 km/h (40 mph)[o]
- புலி 64 km/h (40 mph)[p]
- கழுதைப்புலி 60 km/h (37 mph)[q]
- மனிதர் 47.56 km/h (29.55 mph)
- ஆப்பிரிக்க யானை 24.9 km/h (15.5 mph)[74]
முதுகெலும்பிலிகள் :-
- உயிரினம் பதியப்பட்ட அதிகபட்ச வேகம்
- குதிரை ஈ – 145 km/h (90 mph)[75]
- லோலிஜினிடே மற்றும் ஒம்மஸ்ட்ரேபிடே குடும்பக் கணவாய் மீன்கள் – 36 km/h (22 mph)
- பரடர்சோடொமஸ் மக்ரோபல்பிஸ் –~22 cm/s அல்லது 800 m/h (8.7 in/s அல்லது 0.51 mph)
- புலி வண்டு – 6.8 km/h (4.2 mph)