தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சூப்பரான பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொங்கல் பரிசு: –
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தினத்தன்று பொதுமக்கள் அனைவரும் சிறப்பாக பண்டிகையை கொண்டாட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பல்வேறு வகையான மளிகை பொருட்கள் மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு எந்தவிதமான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கலாம் என தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது. இதில் மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரொக்கமாக பணம் வழங்கலாமா? என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தகவல்கள் கசிந்துள்ளன.
அத்துடன் இந்த ரொக்க பரிசு தொகையுடன் தற்போது, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் 100 ml அல்லது 500 ml ஆவின் நெய் வழங்கப்பட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2023ம் ஆண்டில் 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பானது வழங்கப்பட உள்ளது.